லண்டன் : லண்டனில் ஒரு பிரசித்தி பெற்ற உணவகத்தில் விற்கப்படும் ஒரு கப் டீயின் விலை 13,764 ரூபாயாம். அப்படி என்ன இந்த டீயில் சிறப்பு என்கிறீர்களா?
சர்வதேச அளவில் அனைவராலும் விரும்பி பருகும் ஒரு பானம் தான் இந்த டீ. காலையில் எழுந்தவிடன் டீ குடிக்கவில்லை என்றால் சிலருக்கு பைத்தியமே பிடித்து விடும்.

ஆமாங்க.. அலுவலகமாகட்டும், வீடாகட்டும் அன்றைய நாளில் டீ இல்லையேல், வேலை கூட சரியாக பார்க்க முடியாத சூழ் நிலை. அப்படி ஒரு நிலையில் டீக்கு அடிமை ஆனாவர்கலள் இங்கு அதிகம்.
அதிலும் நம்மூரில் அலுவலகங்களுக்கு அருகிலேயே இதை கொண்டே காசு பார்க்கும் டீக்கடைகள் பேக்கிரிகள் ஏராளம்.
ஆனாலும் ஒரு 10 ரூபாய் மிஞ்சி போனால் 20 ரூபாய்க்குள் இருக்கும். அதென்ன ஒரு கப் டீயின் விலை 13,764 ரூபாய். ஆமாங்க.. லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ளது தான் ரூபென்ஸ் உணவகம், இந்த உணவகத்தில் தான் இந்த கொடுமை.
இங்குதான் ஒரு கப் டீ 200 டாலருக்கு (அதாவது இன்றைய இந்திய மதிப்பில் ரூ.13,764) விற்பனை செய்யப்படுகிறதாம். இங்கு டீ வெள்ளை நிற குடுவையில் பரிமாறப்படுகிறதாம். சாதாரண டீ தூளை கொண்டு இந்த டீ போடப்படுவதில்லையாம்.
இந்த பானையில் வழங்கப்படும் டீ 620 டாலராம். ஆமாங்க.. இந்திய மதிப்பில் 42,668 ரூபாயாம், எனினும் ஒரு கப் டீயின் விலை வெறும் 13,764 ரூபாய் தான் என்கிறார்கள்.
இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் "கோல்டன் டிப்ஸ்" எனும் பிரத்யேக தேயிலையால் இந்த டீ போடப்படுகிறதாம். இந்த தேயிலை கையினால் பறிக்கப்பட்டு பின்னர் வெல்வெட் துணியினால் சுத்தம் செய்யப்பட்டு, இதன் பின்னரே இந்த வெள்ளியாக உள்ள இதன் இலைகள் தங்கமாக மாறுவதாக உயர்த்தி சொல்கிறார்கள்.
இந்த டீயில் அப்படி என்தான் இருக்கிறது? தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறதாம்.
இதன் விலை அதிமாக இருந்ததாலும், இந்த டீயை ஒரு முறையாவது சுவைக்க வேண்டும் என்றும் இவ்வூர் மக்கள் கூறுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications