பிரிட்டன் நாட்டின் பழைய போர் அலுவலகம் கட்டிடத்தை தற்போது ஹோட்டல்களாகவும், வீடுகளாகவும் மாற்றப்பட்டு வரும் வேளையில் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள், முதலீட்டாளர்கள் வாங்குவதில் தீவிரமான ஆர்வம் கொண்டுள்ளனர்.
லண்டனில் உள்ள பாரம்பரியமான OWO என கூறப்படும் Old War Office வளாகத்தை இந்தியாவின் பில்லியனர் குடும்பம் ஒன்று விலைக்கு வாங்கியுள்ளது. இந்திய பில்லியனர் என்ற உடனே அம்பானி, டாடா, அதானி குடும்பமா என கேட்காதீர்கள்.

பிரிட்டன் நாட்டில் நீண்ட காலமாக பெரும் பணக்கார குடும்பமாக இருக்கும் ஹிந்துஜா குடும்பம். பெரும் போட்டிக்கு மத்தியில் இந்த Old War Office வளாகத்தை இந்தக் குடும்பம் வாங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசிடமிருந்து இந்த பழைய போர் அலுவலகத்தை ஹிந்துஜாக்கள் விலைக்கு வாங்கியுள்ளனர், இந்த சொத்தின் மதிப்பு ரூ.13,000 கோடி ஆகும்.
ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை உறுப்பினரான சஞ்சய் ஹிந்துஜா இது பற்றி கூறுகையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்களை வைத்து இந்த விற்பனை ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்றார்.

இந்த பழைய போர் அலுவலக வளாகத்தில் உள்ள குடியிருப்புகளின் விலை 4 முதல் 50 மில்லியன் பவுண்டுகளாகும். வீட்டின் பரப்பளவை பொருத்து விலை இருக்கும். இந்த குடியிருப்புத் திட்டத்தில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும் என்று ஹிந்துஜாக்கள் கருதுகின்றனர். இதில் மொத்தம் 85 வீடுகள் உள்ளன. மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது.
வீடுகளை தாண்டி இங்கு 120 அறைகள், 9 ரெஸ்டாரெண்ட்கள், 3 மது பார்கள் கொண்ட ஹோட்டல் உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த இங்கிலாந்தில் மிகவும் முக்கியமான மற்றும் ஆடம்பரமான ரியல் எஸ்டேட் திட்டமாக Old War Office திட்டம் விளங்குகிறது.

ஹிந்துஜா குடும்ப உறுப்பினர்கள் ஸ்ரீசந்த், கோபி சந்த், பிரகாஷ், அசோக் ஆகியோர் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது இந்த சொத்து பற்றி அறிந்துள்ளனர், உடனடியாக அதை வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக முடிவு செய்தனர்.
இந்த லண்டன் வாழ் இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்தில் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். அசோக் லேலண்டு, கல்ப் ஆயில் லிமிடெட், இண்டஸ்இந்த் வங்கி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
போர்ப்ஸ் கணக்கின்படி ஹிந்துஜா குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.16,66,24,70,000 கோடி.
ஹிந்துஜா குழுமத்தின் அடித்தளம் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா என்பவரால் அமைக்கப்பட்டது, அவர் ஷிகர்பூரில் இருந்து (அப்போது பிரிக்கப்படாத இந்தியாவில்) சுயமாக உருவாகிய இளம் தொழில்முனைவோர்.
பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா ஒரு தொழிலதிபர், அர்ப்பணிப்புள்ள நன்கொடையாளர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்.
பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா (பி. டி. ஹிந்துஜா) 1919 இல் ஈரானில் (இந்தியாவுக்கு வெளியே முதல்) அலுவலகத்துடன் சர்வதேச அரங்கில் நுழைந்தார். ஹிந்துஜா குழுவின் தலைமையகம் 1979 வரை ஈரானில் இருந்தது. பின்னர் அது ஐரோப்பாவுக்கு மாறியது.
ஹிந்துஜா குழுமம் மொபிலிட்டி, டிஜிட்டல் டெக்னாலஜி, மீடியா, பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, லூப்ரிகண்டுகள், சிறப்பு ரசாயனங்கள், எரிசக்தி, ரியல் எஸ்டேட் மற்றும் ஹெல்த்கேர் ஆகிய துறைகளில் பல்வகைப்படுத்தல்களுடன் தனது வணிகங்களை வலுப்படுத்தியது.


Click it and Unblock the Notifications