ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில் லைகா தொலைத்தொடர்பு நிறுவனத்தை ரூ. 3100 கோடிக்கு வாங்கியுள்ளது.
சென்னை: லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் 23 நாடுகளில் தொலை தொடர்பு சேவைகளில் முக்கிய பங்காற்றும் லைகா நிறுவனம் தனது ஸ்பெயின் நெட்ஒர்க்கை ஸ்பெயின் நாட்டின் முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனமான மாஸ்மோ வில் (Masmovil) நிறுவனத்திற்கு 372 மில்லியன் யூரோவிற்கு விற்பனை செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 3100 கோடி ஆகும்.
இந்திய சினிமா துறையில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அல்லிராஜா திகழ்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான கத்தி, காப்பான், செக்கச்சிவந்த வானம், வந்தாராஜாவாதான்வருவேன் தர்பார், எந்திரன்-2, இப்படி பல திரைப்படங்களை இயக்கிய லைகா நிறுவனத்தின் உரிமையாளர் தான் சுபாஷ்கரன் அல்லிராஜா. இவர் இலங்கை பூர்வீக தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன் வர்த்தகத்தை துவங்கிய லைக்கா நிறுவனம் குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்கி 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு ஸ்பெயினின் முக்கியமான தொலைத் தொடர்பு நிறுவனமாக உயர்ந்தது. தற்போது ஸ்பெயினின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில் ( Masmovil) நிறுவனம் லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் நெட்ஒர்க்கை வாங்கியதோடு தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் பெயரையும் நீண்டகாலத்துக்கு பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த பரிவர்த்தனை குறித்து லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி அல்லி ராஜா சுபாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, நாட்டின் மிகப்பெரிய MVNO வை அதி உயர்தரமான சேவையாகவும், குறைந்த கட்டணத்திலான தொலைத் தொடர்புச் சேவையாகவும் கட்டியெழுப்பவேண்டும் எனக் கனவு கண்டோம். அந்தக் கனவு நனவாகி இப்போது அந்த பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். நாங்கள் நினைத்ததை சாதித்து விட்டோம். இயன்ற வரை உயர்தரமான, குறைந்த கட்டணத்திலான தொலைத்தொடர்பு சேவையை கொடுத்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.
உலக அளவில் 23 நாடுகளின் தொலைத் தொடர்பு ச்சந்தைகளில் பிரமாண்ட செயற்பாட்டை தக்கவைத்துள்ளதுடன், புதிய நாடுகளில் தனது சேவையை விரிவாக்கும் உற்சாகமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய நுழைவுகளின் மூலம் லைக்கா தொலைத் தொடர்பு நிறுவனம் (lyca mobile network) உலகளாவிய இருப்பைக் கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் உகாண்டாவில்அண்மையில் ஆரம்பித்த MNO சேவையின்மூலம் தெலைத்தொடர்பு தொழில்துறையில் லைகா மொபைல், தனது அடுத்தகட்ட நகர்வையும், திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications