உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸின் மனைவி தான் மெக்கின்ஸி ஸ்காட். இவர் அவசர நிவாரண நிதி மற்றும் உணவு வங்கிகளுக்கு, கடந்த நான்கு மாதங்களில் 4.1 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், கொரோனாவுடன் போராடி வரும் மக்களுக்கு இதன் மூலம் ஆதரவளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வளவு நன்கொடை
கடந்த நான்கு மாதத்தில் 50 மாநிலங்களில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் உள்ள 384 அமைப்புகளுக்கு 4,158,500,000 டாலர்களை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளார். இது கொரோனாவால் பாதிகப்பட்ட அமெரிக்க மக்களுக்கு நிவாரணமாக இருக்கும் என்றும் மெக்கின்ஸி கூறியுள்ளார்.
இதற்கும் நன்கொடை
இது தவிர சில நன்கொடைகள் கடன் நிவாரணம், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் சட்ட பாதுகாப்பு நிதி போன்ற முறையான அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஸ்காட் 1.7 பில்லியன் டாலர் நன்கொடை கொடுத்துள்ளதாக கடந்த ஜூலையில் கூறியிருந்தார். இந்த நன்கொடையை சமத்துவம், கால நிலை மாற்றம், பொது சுகாதாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக கொடுத்துள்ளதாக ஸ்காட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மெக்கின்ஸி
கடந்த ஆண்டு மிகப்பெரிய பணக்காரரான பெசோஸிடம் இருந்து பிரிந்த பின்னர், தனது செல்வத்தின் பெரும்பகுதியை நன்கொடையாக அளிக்கும் உறுதிப்பாட்டில் கையெழுத்திட்டார் மெக்கின்ஸி ஸ்காட். இவருக்கு அமேசானில் தற்போது 4% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று ஆன்லைன் வர்த்தகத்தில் உலக அளவில் முன்னணி நிறுவனமான இருக்கும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவிதான் மெக்கின்ஸி ஸ்காட்.
விவாகரத்து எப்போது?
ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸியை விவகரத்து செய்வதற்காக, சுமார் 35 பில்லியன் கொடுக்க சம்மதித்தது குறிப்பிடத்தக்கது. அதன் இந்திய மதிப்பு சுமார் 2 லட்சத்து 50 கோடி ரூபாயாகும். இவர் இந்த அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்ஸியை காதலித்து கடந்த 1993- ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 1994-வது வருடம் அமேசான் நிறுவனத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications