வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து குடியேறுவதையும் நிரந்தர குடியுரிமை பெறுவதையும் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அரசாங்கம் புதிதாக ஒரு விதிமுறையை பரிந்துரை செய்திருக்கிறது . இது நடைமுறைக்கு வந்தால் நம்முடைய டிஎன்ஏ முதற்கொண்டு அமெரிக்கா அரசாங்கத்தின் வசம் சென்று விடும்.
அமெரிக்கா அரசின் உள்நாட்டு பாதுகாப்பு துறை நாட்டின் குடியேற்ற விதிகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வர பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி அமெரிக்காவில் குடியேற வேண்டும் என விண்ணப்பம் செய்யக்கூடிய அனைவரின் பயோமெட்ரிக் தகவல்களையும் சேகரிக்க அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

அதாவது இந்த புதிய விதிமுறையின்படி அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் செய்யக்கூடிய அனைவரின் பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும். அமெரிக்காவில் குடியேற வேண்டும் என விண்ணப்பம் செய்யக்கூடிய நபர், அவரின் குடும்பத்தினர், குழந்தைகள் உள்பட குடியேற்ற பலன்களை கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் டிஎன்ஏ உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என பரிந்துரையினல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போதைக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் , அகதிகளாக தஞ்சம் புகுபவர்கள் , வேலை சார்ந்து உரிமம் கோருபவர்களின் டிஎன்ஏ உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகள் மட்டுமே சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அனைத்து விண்ணப்பதாரர்களின் டிஎன்ஏ உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளையும் சேகரிக்க சேகரிக்க இது வழி வகை செய்கிறது.

இது சட்டப்படி நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவில் இமிகிரேஷன் பலன்கள் வேண்டும் என விண்ணப்பம் செய்யக்கூடிய நபர்களின் வயது பாரபட்சம் இல்லாமல் அவர்களுடைய முக அடையாளம் , கைவிரல், குரல் பதிவு ,கையெழுத்து மற்றும் டிஎன்ஏ உள்ளிட்டவையும் இனி சேகரிக்கப்படும். இது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு குடியேற்ற பிரிவில் நடக்கும் மோசடிகளையும் தடுக்கும் என அமெரிக்க அரசு கூறுகிறது.
அதாவது பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டு ஒரு நபரின் அடையாளத்தை சரி பார்ப்பதன் மூலம் ஆட்கடத்தல்கள், சமூக விரோத செயல்களை தடுக்கலாம் குடியேற்றம் சார்ந்து நடக்கும் மோசடிகளை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கிறது. டிரம்ப் நிர்வாகம் ஆட்சி அமைத்தது முதலே குடியேற்றத்தில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
வெளிநாட்டவர்களின் தரவுகளை சேகரிப்பது அவற்றை கண்காணிப்பது, அடிக்கடி அவர்கள் இருப்பிடம் சென்று ஆய்வு நடத்துவது என டிரம்ப் நிர்வாகம் கண்காணிப்பை தீவிர படுத்திருக்கிறது. தற்போதைக்கு இந்த பரிந்துரையில் 60 நாட்களுக்கு பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். இதன் பின்னர் அரசு முடிவெடுத்து இதனை சட்டமாக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications