டெக் நிறுவனங்களில் மூன்று ஆண்டுகளாக நடப்பது இதுதான்.. Job Safety என்ற பேச்சுக்கே இனி இடமில்லை..!!

சர்வதேச அளவில் பல்வேறு டெக் நிறுவனங்களும் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது அதிகரித்துவிட்டது. பெரிய நிறுவனங்களில் வேலைக்கு செல்வது என்பதெல்லாம் கனவாகி வருகிறது.

மென்லோ வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கக்கூடிய deedydas தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கடந்த மூன்று ஆண்டுகளில் உலக அளவில் பெரிய டெக் நிறுவனங்களில் எல்லாம் தொழில் வளர்ச்ச் மற்றும் வேலை வாய்ப்பு விகிதம் என்பது பூஜ்ஜியமாக தான் இருக்கிறது என பதிவிட்டு இருக்கிறார். இது தொடர்பான தரவுகளை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

கூகுள், மைக்ரோசாப்ட் ,ஆப்பிள், டெஸ்லா, மெடா, என்விடியா ஆகிய உலகின் பெரிய டெக் நிறுவனங்களில் எல்லாம் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் உயரவே இல்லை எனக் கூறியிருக்கிறார். எனவே பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை என்ற காலம் தற்போது மலையறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிப்பை முடித்த பெரும்பாலானவர்கள் வேலை கிடைக்காமல் தவிப்பதற்கும், பெரு நிறுவனங்களில் பணி நீக்கம் நடைபெறுவதற்கும் இந்த தரவுகளே முக்கிய காரணம் என அவர் தெரிவிக்கிறார்.

டெக் நிறுவனங்களில் மூன்று ஆண்டுகளாக நடப்பது இதுதான்.. Job Safety என்ற பேச்சுக்கே இனி இடமில்லை..!!

தன்னுடைய பதிவுடன் அவர் பகிர்ந்துள்ள படத்தில் 2015 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. அதுவே 2022 ஆம் ஆண்டில் இந்த பெரிய டெக் நிறுவனங்களில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை என்பது 1, 20,000 ஐ கடந்து இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய டெக் நிறுவனங்களில் எல்லாம் ஊழியர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை உயரவே இல்லை,மாறாக குறைக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மிக சொற்ப அளவிலான ஊழியர்களே புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 2025 ஆம் ஆண்டிலும் புதிய ஊழியர்கள் சேர்க்கை என்பது நடைபெறவே இல்லை என அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2010 இல் இருந்து 2025 வரையிலான இந்த காலகட்டத்தில் உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டும்தான் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்திருக்கிறது என அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

இந்த பட்டியலில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது . அதுவும் இந்த நிறுவனங்கள் எல்லாம் 2021 ஆம் ஆண்டில் இருந்துதான் பெரிய அளவு வேலை வாய்ப்பு தந்திருக்கின்றன. 2022க்கு பிறகு இந்த நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது பெருமளவில் வளர்ச்சி அடையவில்லை.

2020 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளும் உலகமே கொரோனா பெருந்தொற்றில் சிக்கி தவித்து வந்தது. அந்த காலகட்டத்தில் டெக் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்திவிட்டன என அவர் குறிப்பிடுகிறார். அந்த சமயத்தில் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மட்டுமே டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தினர்.

எனவேஅந்த சமயத்தில் மென்பொருள்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது. இதனால் டெக் நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்துவிட்டன. ஆனால் பெருந்தொற்று முடிவுக்கு வந்த பிறகு இயல்பு நிலை திரும்பி விட்டது. மென்பொருட்கள் பயன்பாடும் குறைந்துவிட்டது. எனவே கொரோனா காலத்தில் பெருமளவில் வருமானம் ஈட்டிய டெக் நிறுவனங்களுக்கு வருமானம் குறைய தொடங்கியுள்ளது.

டெக் நிறுவனங்களில் மூன்று ஆண்டுகளாக நடப்பது இதுதான்.. Job Safety என்ற பேச்சுக்கே இனி இடமில்லை..!!

இதன் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுக்காமல் ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுவாக ஒரு நிறுவனத்தின் நிறுவனத்தின் தொழிலும் லாபமும் வளரும் போது தான் அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி குறைந்து இருக்கிறது என அவர் குறிப்பிடுகிறார்.

இனி வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மாறலாம் என்றும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இருந்தாலும் ஏஐ தொழில்நுட்பம் இதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பெரும்பாலான வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்தவையாக மாற்றி வருகின்றன. அண்மையில் கூட ஐபிஎம் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ஹெச்ஆர் வேலைகளை ஏஐஏஜென்ட்களிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி இருக்கிறது.

கூகுள் நிறுவனம் கூட தங்கள் நிறுவனத்தில் பெரும்பாலான கோடிங் வேலைகளை ஏஐ கொண்டே நாங்கள் முடித்துக் கொள்கிறோம் என அண்மையில் தெரிவித்திருந்தது. தற்போது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பம் முக்கியமான இடத்தை பிடித்து விட்டது. இதுவும் நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.

எனவே இனிவரும் நாட்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த வேலை வாய்ப்பு சந்தை என்பது சாதகமானதாக இருக்கும் என சர்வதேச அளவிலான நிபுணர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்ளாதவர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

உலக அளவில் பல்வேறு நிறுவனங்களிலும் நடைபெற்று வரக்கூடிய ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து layoff.fyi என்ற இணையதளம் தரவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 127 டெக் நிறுவனங்கள் 59,413 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. இன்டெல், மைக்ரோசாப்ட், ஐபிஎம், மெடா உள்ளிட்டவை இந்த பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன.

பிபிஓ, கோடிங், ஹெச் ஆர் என பல்வேறு பணிகளும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்கள் கையை விட்டு செல்கின்றன. செயல்திறன், லாபம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பெரு நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டன. எனவே இனி வரும் நாட்களில் வேலைவாய்ப்பு சந்தையில் பல மாற்றங்களை காண முடியும் என்பதால் நாம் அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

FAQs
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் எந்தெந்த வேலைகளை பாதித்துள்ளது?

BPO, ஹெச்.ஆர், கோடிங் போன்ற பணிகளை ஏஐ செய்வதால், அதில் இருந்த மனிதர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

பெரிய டெக் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?

2022க்கு பிறகு பெரும்பாலான பெரிய டெக் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வளர்ச்சி இல்லையே

டெக் நிறுவனங்கள் ஏன் ஊழியர்களை நீக்குகின்றன?

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டதால், தற்போது தேவையற்ற ஊழியர்கள் குறைக்கப்படுகின்றனர். இதற்கு ஏஐ வளர்ச்சியும் ஒரு காரணம்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+