7 வருடத்திற்குப் பின் வட்டி குறைந்தது மலேசியா..!

கோலா லம்பூர்: தொடர்ந்து சரிந்து வரும் ஏற்றுமதி அளவுகள், சர்வதேச சந்தைகளின் மோசமான சூழ்நிலை ஆகியவை மலேசிய நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டிவைத்துள்ளது.

இந்த இக்காட்டான சூழ்நிலையில் இருந்து தப்புவதற்காக மலேசிய நாட்டின் மத்திய வங்கி கடந்த 7 வருடங்களில் குறைக்கப்படாத வட்டி விகிதத்தை, நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

மலேசியா

மலேசியா

சரிவு பாதையில் செல்லத் துவங்கிய மலேசிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்நாட்டு மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25% குறைந்து 3.00 சதவீதமாக அறிவித்துள்ளது.

பிற முக்கிய நாடுகள்

பிற முக்கிய நாடுகள்

மலேசியா நாட்டிற்கு முன் சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய வங்கிகளும் தங்களது வட்டி விகிதத்தைக் குறைந்துள்ளது. மேலும் உலக நாடுகளில் இருந்து பிற முக்கியப் பொருளாதார நாடுகளில் மத்திய வங்கிகளும் தங்களது நாணயக் கொள்கையில் வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதனால் அடுத்தச் சில வாரங்களில் வளரும் பொருளாதார நாடுகளில் பணப்புழக்கம் அதிகரித்துக் காணப்படும் எனத் தெரிகிறது.

 

ஏற்றுமதி

ஏற்றுமதி

சர்வதேச சந்தைகளின் தேவைகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் மலேசிய நாட்டின் ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து சரிவு பாதையில் உள்ளது. அடுத்தச் சில மாதங்களுக்கும் இதே நிலையில் தான் இருக்கும் என நீக்ரா வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 5 காலாண்டுகளாக இந்நாட்டின் ஏற்றுமதி அளவுகள் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

2014ஆம் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திய மலேசிய மத்திய வங்கி 2009ஆம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாகப் புதன்கிழமை தான் தனது வட்டி விகிதத்தைக் குறைந்துள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசிய நாட்டின் பொருளாதாரம் 4.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய கவர்னர்

புதிய கவர்னர்

மலேசிய மத்திய வங்கியின் கவர்னராக 16 வருடம் இருந்த Zeti Akhtar Aziz பணியிடத்தில் தற்போது முகமத் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்ராஹிம் பதவியேற்றிய 2 மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+