ஆத்தாடி... அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலையா? Unemployment Benefit திட்டங்களில் சொதப்பல்!

அமெரிக்கா என்கிற நாட்டைப் பற்றி நினைத்தாலே என்ன நினைவுக்கு வரும்...? பெரிய வல்லரசு நாடு. அங்கு இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அரசு சலுகைகள் மற்றும் அரசு திட்டங்கள் எல்லாம் கடைசி குடிமகன் வரை பக்காவாகச் சென்று சேரும் எனச் சொல்லக் கேட்டு இருப்போம்.

அப்படி இல்லை என்றால் ஹாலிவுட் படத்திலாவது பார்த்து இருப்போம். ஆனால் இன்று... நாம் கேட்டவைகள் மற்றும் ஹாலிவுட்டில் பார்த்தவைகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதத்தில் சில செய்திகள் வந்து இருக்கின்றன.

Unemployment Benefit

Unemployment Benefit

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில், ஒரு நபர் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை இழந்தால், அவருக்கு அரசு சில பண உதவிகளைச் செய்யும். அந்த உதவிகளின் பெயர் தான் Unemployment Benefit. இப்போது அமெரிக்காவில் அது தான் சூடு பிடித்துக் கொண்டு இருக்கிறது.

வேலை இழப்பு

வேலை இழப்பு

அமெரிக்காவில் சுமாராக 16.6 மில்லியன் பேர் (1.66 கோடி பேர்) தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்து, அரசின் Unemployment Benefit-க்காக விண்ணபித்து இருப்பதாக சமீபத்தைய செய்திகள் சொல்கின்றன. இவர்களுக்கு எல்லாம் முறையாக அரசின் Unemployment Benefit பணம் கிடைக்கிறதா..? என்றால், இல்லை.

29 % பேருக்கு மட்டுமே

29 % பேருக்கு மட்டுமே

அமெரிக்காவில் Pew Research Center என்கிற அமைப்பு எடுத்த பகுப்பாய்வில், வேலை இழந்து Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் 29 சதவிகித அமெரிக்கர்களுக்கு மட்டுமே கடந்த மார்ச் 2020-ல் வேலை இல்லாதவர்களுக்கான சலுகைப் பணத்தை பெற்று இருப்பதாகச் சொல்லி நமக்கு ஷாக் கொடுக்கிறது. அப்படி என்றால் மீதி 71 % பேரின் நிலை?

கிடைக்கவில்லை

கிடைக்கவில்லை

Unemployment Benefit-க்கு விண்ணப்பித்த, மீதமுள்ள 71 சதவிகிதம் பேர், கடந்த மார்ச் 2020-ல், தங்களுக்கான சலுகை பணத்தைப் பெறவில்லையாம். அதே போல ஒவ்வொரு மாகாணத்திலும், Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு பணத்தை பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதமும் மாறுபட்டுக் இருக்கிறதாம். அதாவது எல்லா அமெரிக்க மாகாணங்கலிலும் ஒரே போல எண்ணிக்கையில் சலுகைப் பணத்தைக் கொடுக்கவில்லை.

மாகாணம்

மாகாணம்

உதாரணமாக மாசாசூட்ஸ் (Massachusetts) மாகாணத்தில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் 66 சதவிகிதம் பேருக்கு, வேலை இழந்தவர்களுக்கான பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம். ஆனால்ம் ஃப்ளோரிடா (Florida)-வில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் வெறும் 7.6 சதவிகிதம் பேருக்கு தான் சலுகைப் பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

சமம் இல்லை

சமம் இல்லை

அமெரிக்க மத்திய அரசு CARES Act வழியாக, 2.2 ட்ரில்லியன் டாலரை கொரோனா உதவித் தொகையாக ஒதுக்கி இருக்கிறது. ஆனால் அதை கொடுக்கும் வேலையை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட்டது. மாநில அரசுகளோ சொதப்பித் தள்ளிக் கொண்டு இருக்கிறது. அதற்கு இன்னொரு உதாரணம். கொடுக்கும் சலுகைப் பணத்தில் அளவில் வேறுபாடு.

வேறுபாடு

வேறுபாடு

மிசசிப்பி (Mississippi) மாகாணத்தில் வசிப்பவருக்கு Unemployment Benefit-ஆக வாரத்துக்கு 235 டாலர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் மாசாசூட்ஸ் (Massachusetts) மாகாணத்தில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு வாரத்துக்கு 823 டாலர் கொடுக்கிறார்களாம். இன்னும் சில மாகாணங்களில், சார்ந்து இருப்பவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதலாக பணம் கொடுக்கிறார்களாம். சில மாகாணங்கள் கொடுப்பதில்லையாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்கா, இப்படியும் இருக்குமா..? தன் மக்களுக்கே சமமாக பணத்தைக் கொடுக்க முடியாமல் தவிக்குமா? என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டோம். ஆனால் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு 2.2 ட்ரில்லியன் டாலர் கொடுத்தும், தன் மாகாண மக்களுக்கு முழுமையாக, சரியான முறையில், சமமான அளவில் பணத்தைக் கணக்கிட்டு கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. மக்களோ பணம் கைக்கு வராமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்த கொரோனா என்ன எல்லாம் செய்யப் போகிறதோ தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+