உலகக் கோடீஸ்வர்கள் பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்து வந்த பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் 3-ம் இடத்தில் இருந்த வாரன் பபெட்டினை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இனி உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்கு அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையில் தான் தொடர்ந்து போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனப் பங்குகளின் விலை வெள்ளிக்கிழமை 2.4 சதவீதம் உயர்ந்ததை அடுத்து 34 வயதான மார்க் ஜூக்கர்பெர்க் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தினைப் படித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பானது வாரன் பபெட்டினை விட 373 மில்லியன் டாலர் அதிகம் என 81.6 பில்லியன் டாலாரக உயர்ந்துள்ளது.
கேபிரிட்ஜ் அனலிட்டிகா
பேஸ்புக் நிறுவனம் கேபிரிட்ஜ் அனலிட்டிகா சர்ச்சையில் சில மாதங்களுக்கு முன்பு சிக்காமல் இருந்திருந்தால் ஓர் இரு மாதங்களுக்கு முன்பே மூன்றாம் இடத்தினை மார்க் ஜூக்கர்பெர்க் பிடித்து இருப்பார்.
வாரன் பப்பெட்
வாரன் பப்பெட் ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆக இருந்து வந்த நிலையில் 2006-ம் ஆண்டு அவரது பங்குகளைத் தொண்டு நிறுவனங்களுக்கு எழுதி வைத்ததால் அவரது சொத்து மதிப்புகள் சரிந்தது.


Click it and Unblock the Notifications