உலக நாடுகளில் பிரபலமாகி வரும் பிட்காயின், டோஜ்காயின் போன்ற கிரிப்டோ முதலீடுகளில் அதிகளவில் லாபம் கிடைக்கும் காரணத்தால் சிறு குறு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் டெக் நிறுவன தலைவர், பெஷன் பண்ட் முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினர் ஈர்க்கப்பட்டு முதலீடு செய்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்-ன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் செல்ல பிராணியாக நாய் குட்டி அல்லாமல் இரண்டு ஆட்டுக்குட்டியையும் வளர்த்து வருகிறாராம்.
இதில் ஒரு ஆட்டுக்குட்டிக்கு பிட்காயின் எனப் பெயர் வைத்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டு உள்ளார்.

இந்தப் பதிவுக்குப் பல விநோதமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. இப்பதிவிற்கு 13 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும், 3 லட்சம் கமெண்ட், 25000த்திற்கும் அதிகமான ஷேர்களும் செய்யப்பட்டு உள்ளது.
சரி உங்க வீட்டில் என்ன செல்ல பிராணிகள் உள்ள..? அதற்குப் பெயர் என்ன..? என்பதைக் கமெண்ட் பண்ணுங்க


Click it and Unblock the Notifications