அமெரிக்கா: உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பதவி என்பது சாதாரணமல்ல. ஆனால் அதற்காக எப்போதும் வேலை வேலை என்றே இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாக பேஸ்புக் நிறுவனரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜக்கர்பர்க் அண்மையில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.
மார்க் ஜக்கர்பர்கிற்கு மெட்டா நிறுவனத்தை கவனித்து கொள்வதை தாண்டி புதிய பொறுப்பு வந்துள்ளது. அது தான் மகளை கவனித்து கொள்வது. மார்க்கிற்கு ஆகஸ்ட், மேக்சிமா, ஆரிலியா என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்காக மார்க் தந்தையாக புதிதாக ஒரு திறனை கற்றுக் கொண்டிருக்கிறார். அதனை மிகப் பெருமிதமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவு செய்துள்ளார்.

உலக அளவில் இரண்டாவது பணக்காரராக உயர்ந்திருக்கும் மார்க் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் தன்னுடைய மகளுக்கு அவர் நெயில் பாலிஷ் வைக்கிறார். இந்த வீடியோவை பதிவு செய்துள்ள அவர் ஒரு அப்பாவாக என்னுடைய திறன்களை நான் மேம்படுத்தி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதில் அண்மையில் மெட்டா நிறுவனம் புதிதாக வெளியிட்ட மிக்ஸடு ரியாலிட்டி ஹெட் செட்டை குறிப்பிடும் வகையில் Quest 3S என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த ஹெட்செட்டை பயன்படுத்தி தான் அவர் தனது மகளுக்கு நெயில் பாலிஷ் வைக்க கற்று கொண்டதாக தெரிகிறது. வீடியோவின் இறுதியில் அவரது மகள் அழகாக இருக்கிறது என நெயில் பாலிஷை காட்டுகிறார்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மார்கின் மகள் ஒரு இருக்கையில் அமர்ந்து கைகளை ஒரு டேபிளின் மேல் வைத்திருக்கிறார். மார்க் புன்னகையோடு தன்னுடைய மகளின் நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைக்கிறார்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் நவீன கால தந்தைகளுக்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஒரு தந்தை என பதிவு செய்துள்ளார்.
மற்றொரு பயனர் ஒரு தலைமை செயல் அதிகாரியாக இருந்தும் மார்க் தற்போது தன்னுடைய மகளுக்காக ஒரு ஸ்டைலிஷ் ஆக மாறி இருக்கிறார் என தெரிவித்துள்ளார். சிலர் இவ்வளவு பணிகள் இருந்தாலும் தன்னுடைய மகளுக்காக மார்ச் நேரம் ஒதுக்குவதை பாராட்டியுள்ளனர். இந்த ஆண்டின் தந்தைக்கான விருது இவருக்கு வழங்க வேண்டும் என்பன பாசிட்டிவான கமெண்ட்களை காண முடிகிறது.


Click it and Unblock the Notifications