மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலிக்குப் பின்னால் உள்ள நெகிழ்ச்சியான பின்னணி பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அந்த தங்கச் சங்கிலியை ஒரு ஆபரணமாக நினைத்து அணியவில்லை என்றும் அது எந்தளவுக்கு தனது குடும்பத்துடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளது என்பது பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.
அந்த கஸ்டமைஸ்டு செயினுக்கு ஒரு ப்ரேயர் (Prayer) உள்ளது என்றும் தினமும் இரவில் தனது மகள்களை தூங்க வைக்கும்போது அந்த வேண்டுதல் பாடலை பாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது, பேட்டி எடுத்த நெறியாளர் மார்க் ஜுக்கர்பெர்க்கை பார்த்து, நீங்கள் அணிந்திருக்கும் செயின் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டார். அதற்கு மார்க் ஜுக்கர்பெர்க், ஓ! இந்த செயினா? என்றபடி அந்தச் செயினை கையில் பிடித்துப் பார்க்கிறார்.
பின்னர், இது ஒரு ஸ்பெஷல் செயின். அந்த செயினில் கடவுள் வாழ்த்து ஒன்றை ஒரு டிசைனர் மூலம் பொறித்துள்ளேன். இந்த வாழ்த்துப் பாடலை நான் தினமும் எனது மகள்களை படுக்கையில் தூங்க வைக்கும்போது அவர்களுக்காகப் பாடுவேன். அது ஒரு யூதப் பாடல் ஆகும். மீ ஷெபெய்ராக் (Mi Shebeirach) என்று பெயர். ஆரோக்கியத்துக்கும் துணிச்சலுக்குமான பாடல் அது. அந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் எங்கள் வாழ்க்கையில் துணிச்சலும் ஆரோக்கியமும் பெருகட்டும் என்றார்.
மேலும் நான் இதை தீவிரமாக நம்புகிறேன். தினமும் அந்தப் பாடலை எனது மகள்களுக்காகப் பாடுகிறேன். அவர்கள் பிறந்தது முதல் நான் அவர்கள் முன்னால் பாடுவேன். வேலை விஷயமாக நான் வெளியூர் செல்லும் போது அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கும் பட்சத்தில் தினமும் பாடுவேன். எப்படியாவது தூங்கும் நேரத்தில் மகள்களுக்குப் பக்கத்தில் வந்து விடப் பார்ப்பேன். இது எனது குடும்பத்துக்கும் எனக்கும் ஒரு அர்த்தத்தைத் தருகிறது என்று உணர்ச்சிவசப்பட்டவாறு கூறினார்.
மார்க் ஜுக்கர்பெர்க்கும் பிரிசில்லா சானும் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2015 ஆம் ஆண்டில் முதல் மகள் மேக்ஸிமா பிறந்தார். 2017 ஆம் ஆண்டில் இரண்டாவது மகள் ஆகஸ்ட் பிறந்தார். மூன்றாவதாக மகள் ஆரேலியா 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்தார். இவர்களுடன் பீஸ்ட் என்ற செல்லநாயையும் தம்பதியர் வளர்க்கின்றனர்.
எவ்வளவுதான் வேலையாக இருந்தாலும் மார்க் ஜுக்கர்பெர்க் எப்படியாவது அன்றைக்கு இரவு வீட்டுக்குத் திரும்ப முயற்சிப்பார். மூன்று மகள்களையும் படுக்கையில் படுக்க வைத்து இந்த கடவுள் வாழ்த்தை பாடி தாலாட்டித் தான் தூங்க வைக்கிறார். மகள்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள அப்பாவாக இருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications