உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் ஏஐ நிறுவனமாக இருக்கும் கூகுளின் தாய் நிறுவனமாக ஆல்பபெட் நேற்று வெளியிட்ட காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை விடவும் குறைவாக இருந்த காரணத்தால் இன்று அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் 13 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
ஆல்பபெட் நிறுவனத்தின் முக்கிய அஸ்திவாரமே அதன் விளம்பர வர்த்தகம் தான், ஆனால் செப்டம்பர் காலாண்டில் விளம்பர வர்த்தக வளர்ச்சி மந்தமடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதேபோல் கூகுள் தனது ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காகச் செய்யும் செலவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதன் எதிரொலியாக இன்று கூகுள் பங்குகள் 8 சதவீதம் வரையில் சரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13.4 சதவீதம் வரையில் சரிந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது.
செப்டம்பர் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் லாபம் வருடாந்திர அளவில் 25 சதவீதம் குறைந்து 26.17 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் 34.98 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வருவாய் 25 சதவீதம் அதிகரித்து 127.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் ஆல்பெட் ஒரு பங்கிற்கு 2.12 டாலர் வருவாய் மட்டுமே பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.87 டாலராக இருந்து வருகிறது.
வருவாய் அளவீட்டிலும் சரி, EPS அளவீட்டிலும் சரி கூகுளின் ஆல்பபெட் சந்தை கணிப்புகளைக் காட்டிலும் குறைவான அளவீட்டை பதிவு செய்து முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் தள்ளியதன் விளைவாக இன்று ஆல்பபெட் பங்குகள் 13.4 சதவீதம் சரிந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
உலகளவில் கிளவுட் கம்பியூட்டிங், ஏஐ சேவைகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் வேளையிலும் லாபம் குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் பெரும் தடுமாற்றத்திலும், சிக்கலிலும் மாட்டிக்கொண்டு உள்ளது. டெக் மற்றும் ஏஐ துறையை சார்ந்த நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டில் பதிவான அதிகப்படியான பங்கு விலையில் இருந்து அதிரடியாகக் குறைந்துள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனப் பங்குகள் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் பெரும் ஆதிக்கம் செய்யும் S&P 500 குறியீட்டு வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி வரும் இதேவேளையில் டெக் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்து Bear Market-ல் இயங்கும் ஒரு ஸ்டெல்த் மார்க்கெட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய சான்றாகக் கூகுள் பங்குகளின் இன்றைய சரிவு அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

