மெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : தினசரி செய்தித் தாள்களில் பாலியல் துன்புறுத்தலுக்கான செய்திகள் தினசரி ஒன்றிரண்டாவது வெளியாகிய வண்ணம் தான் உள்ளது. இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவில் எல்லா நாடுகளிலும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

இதற்கு உதாரணம் தான் மெக்டொனால்டின் மீதான பதியபட்டுள்ள வழக்குகள். அட ஆமாம்பா அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெக்டொனால்டு நிறுவனத்தின் மீது 25க்கும் மேற்பட்ட பாலியல் குறித்த வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அதோடு பல ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடியும் தூக்கியுள்ளார்களாம்.

 
மெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்

இதுகுறித்து அமெரிக்க சிவில் லிபர்டிஸ் யூனியன் (ACLU) அறிவித்துள்ள அறிக்கையில், 15 டாலர்களுக்காக போராடும் தொழிலாளர் குழு ஒரு பக்கம், தொழிலாளர்களை இழிவுபடுத்துதல், பாலியல் தொடர்பான குற்றங்கள், தொழிலாளர் குறித்த அனாவசியாமான கருத்துகள் இது போன்ற பல பிரச்சனைகள், அமெரிக்காவில் உள்ள 20 முக்கிய நகரங்களில் உள்ள மெக்டொனால்டில் நடந்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

சிகாகோவைச் அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம் அமெரிக்காவில் 850,000 தொழிலாளர்களுடன், 14,000 க்கும் அதிகமான இடங்களில் தனது கிளையைக் கொண்டுள்ளது இந்த மெக்டொனால்டு நிறுவனம்.

இதற்கு இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு அதிகளவில் உள்ள கிளைகளில் 90 சதவிகிதம் கிளைகள் உரிமை நிறுவனங்களாகவே உள்ளன. அதாவது பிரான்சிஸியாக உள்ளன. ஆக உரிமையாளர்களுக்கான உணவகங்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது என்றும் அறிவித்துள்ளதாம்.

அதோடு இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் கூறுகையில், நிறுவனம் இது போன்ற கொள்கையில் நிறுவனம் மிக தெளிவாக உள்ளது. இது போன்ற உரிமையாளர்களுக்கு தெளிவான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறதாம்.

எனினும் இதற்காக தனியாக முன்னணி ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், அதோடு இது குறித்த ஹாட்லைன் ஒன்றை அமைப்பதாகவும் கூறியுள்ளதாம் இந்த நிறுவனம்.

தற்போது பதியப்பட்டுள்ள 25 வழக்குகளில் 3 வழக்குகள் புதியாதாக வழக்கு செய்யப்பட்டவை. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மெக்டொனால்டு மீது, இது போன்ற 50 வழக்குகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் ACLU தெரிவித்துள்ளது.

அதிலும் கடந்த செப்டம்பரில அமெரிக்காவில் உள்ள 10 நகரங்களில், உள்ள மெக்டொனால்டின் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்துதலை எதிர்த்து ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mcdonald
English summary

McDonald's faces more sexual harassment complaints from workers

McDonald Corp was accused on Tuesday in 25 new lawsuits and regulatory charges of condoning sexual harassment in workplace.
Story first published: Wednesday, May 22, 2019, 16:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X