அமெரிக்காவின் மிகப்பெரிய உணவு நிறுவனமான மெக்டொனால்டு, சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் கடந்த 20 வருடமாகத் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மெக்டொனால்டு தனது முக்கியச் சந்தைகளாக இருக்கும் சீனா, ஹாங்காங் சந்தை வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறி அமெரிக்க உணவு நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 வருட வர்த்தகம்
மெக்டொனால்டு நிறுவனத்திற்கான பிரான்சைஸ் உரிமையைச் சிடிக் லிமிடெட், சிடிக் கேபிடல் மற்றும் கார்லைலே குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு அளித்து மெக்டொனால்டு நிறுவனம் இந்த 3 நிறுவனங்களுடன் இணைந்து சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் கடந்த 20 வருடமாக வர்த்தகத்தை நடத்தி வந்தது.
பங்கீடு
இந்த நான்கு நிறுவன கூட்டணியில் சிடிக் மற்றும் சிடிக் கேபிடல் 52 சதவீதமும், கார்லைலே 28 சதவீதமும், மெக்டொனால்டு 20 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
விற்பனை
ஆனால் திங்கட்கிழமை மெக்டொனால்டு நிறுவனம் இவ்விரு சந்தைகளிலும் தனக்கிருந்த 20 சதவீத பங்குகளைச் சிடிக் மற்றும் கார்லைலே நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தது.
2.08 பில்லியன் டாலர்
இதன் படி மெக்டொனால்டு கட்டுப்பாட்டில் இருந்த 20 சதவீத பங்குகளை 2.08 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது.
2000 கிளைகள்
இந்த நான்கு நிறுவன கூட்டணியில் தற்போது சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் சுமார் 2,000 மெக்டொனால்டு கிளை உள்ளது. தற்போது இதனை விற்பனை செய்துள்ளதால் புதிய நிறுவன கூட்டணி கிராமப்புறங்களில் புதிதாக 1500 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications