93ஆவது வயசுல 5ஆவது திருமணம்.. டியர் 90ஸ் கிட்ஸ் இந்த செய்திய படிச்சீங்களா..?

அமெரிக்கா: சர்வதேச அளவில் பிரபல ஊடக நிறுவன அதிபராக அறியப்படக்கூடியவர் ரூபர்ட் முர்டோக். தன்னுடைய செய்தி ஊடகங்கள் மற்றும் சொத்து மதிப்பால் மட்டும் அல்ல தன்னுடைய திருமணங்களாலும் பிரபலமடைந்தவர் இவர். தற்போது 93 வயதாகும் இவர் 5ஆவது திருமணம் செய்துள்ளார்.

ரூபர்ட் முர்டோக், 67 வயதான எலெனா என்பவரை திருமணம் செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த திருமணமானது கலிபோர்னியாவில் உள்ள ரூபர்ட்டின் பங்களாவில் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

93ஆவது வயசுல 5ஆவது திருமணம்.. டியர் 90ஸ் கிட்ஸ் இந்த செய்திய படிச்சீங்களா..?

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஃபாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் தான் ரூபர்ட் முர்டோக். கடந்த ஆண்டு தன்னுடைய இந்த ஊடக நிறுவனங்களின் பொறுப்பை மகனுக்கு இவர் தாரை வார்த்தார். இதனை அடுத்து அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான எலேனாவை கரம் பிடித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த எலேனா தற்போது அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டார். உயிரியல் துறை வல்லுநராக செயல்பட்டு வரக்கூடிய அவர் ரஷ்யாவில் முக்கிய அரசியல்வாதியாக இருக்கும் அலெக்ஸாண்டர் என்பவரின் முன்னாள் மனைவி ஆவார். தற்போது இவர் முர்டோக்கை திருமணம் செய்துள்ளார்.

இவ்விருவருக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கிறது.
ரூபர்ட் முர்டோக்கின் முதல் மனைவி பேட்ரிகா புக்கர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். விமான பணிப்பெண்ணாக இருந்தவர். 1956 ஆம் ஆண்டு இவருக்கும் ரூபர்ட்டுக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967ஆம் ஆண்டு ரூபர்ட்டும் அவரது முதல் மனைவி புக்கரும் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து 1967ஆம் ஆண்டு அனா டோர்வ் என்ற செய்தி வாசிப்பாளரை இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவருடன் கிட்டத்தட்ட 32 ஆண்டு காலம் இவர் வாழ்ந்தார். இருப்பினும் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1999 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

1999 ஆம் ஆண்டிலேயே வெண்டி டெங் என்பவரை திருமணம் செய்தார் .ஆனால் 2013 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். 2016 ஜெர்ரி ஹால் என்பவரை நான்காவதாக திருமணம் செய்தார்.

2022இல் அவரை பிரிந்து விட்டார். கிட்டத்தட்ட நான்கு திருமணங்களிலும் மனம் முறிவு ஏற்பட்டு ரூபர்ட் மீண்டும் தன்னுடைய 93ஆவது வயதில் ஐந்தாவதாக ஒருவரை கரம் பிடித்துள்ளார். ரூபர்ட் முர்டோக் அவர்களின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+