கூகுள் நிறுவனத்தின் முதல் 19 ஊழியர்கள்..இப்போது என்ன செய்கின்றார்கள் தெரியுமா..?

கூகுள் நிறுவனத்தின் முதல் 19 ஊழியர்கள்..இப்போது என்ன செய்கின்றார்கள் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் நம்பர் ஒன் இணையதள ஜாம்பவான் நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பணி செய்து கொண்டிருப்பவர்கள் வெறும் 6 பேர்கள் தான். இவர்களில் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனங்களாக லேரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆகியோர் அடங்குவர்.

 

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருசிலர் தொழிலதிபர்களாகவும், முதலீட்டாளர்களாகவும், ஒருசில அதிர்ஷ்டசாலி ஊழியர்கள் வேறு நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் அந்தஸ்து பதவியிலும், ஒருசிலர் ஓய்வு பெற்றும் உள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டுக் கூகுளில் ஆரம்பத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்கள் குறித்த ஒரு பட்டியல் எடுக்கப்பட்டது 21 பேர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் தற்போது ஆறு பேர் மட்டுமே கூகுளில் உள்ளனர். இந்நிலையில் கூகுள் ஆரம்பித்த காலத்தில் இருந்த 19 பேர்கள் குறித்த தகவல்களைத் தற்போது பார்ப்போம்

1. மரிசா மேயர்

1. மரிசா மேயர்

கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராகப் பணியில் இணைந்தவர் தான் இந்த மரிசா மேயர். தற்போது இவர் யாஹூ நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகப் பணிபுரிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: ஜூன் 1999 முதல் ஜூலை 2012 வரை

கூகுளில் பணிபுரிந்த பதவிகள்: விபி, லோக்கல், மேப்ஸ்& லொகேஷன் சர்வீசஸ்

 

2. கேண்ட்ரா டிஜிரோலாமா

2. கேண்ட்ரா டிஜிரோலாமா

கூகுள் நிறுவனத்தில் கேண்ட்ரா டிஜிரோலாமா அவர்கள் விளம்பர விற்பனை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் பணிபுரிந்தார். மூன்று வருடங்களுக்குப் பின்னர் அவர் ஐபிஓ என்ற நிறுவனத்திற்குச் சென்றார். தற்போது இவர் டிரிஸ்கோல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: ஜூன் 1999 முதல் மே 2001 வரை

கூகுளில் பணிபுரிந்த பதவிகள்: விளம்பர விற்பனை ஒருங்கிணைப்பாளர்

 

3. ஜிம் ரீஸ்
 

3. ஜிம் ரீஸ்

கூகுள் நிறுவனத்தில் முன்னாள் பொறியாளராகப் பணிபுரிந்தவர். பின்னர் ஒருகட்டத்தில் இவர் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 முதல் 2005 வரை

கூகுளில் பணிபுரிந்த பதவிகள்: தலைமை ஆபரெஷன் பொறியாளர்

தற்போது பணிபுரியும் இடம்: ஸ்பார்க் புரோகிராம் நிறுவனத்தின் போர்டு மெம்பர் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூள் டிபார்ட்மெண்ட் மற்றும் பயோமெடிக்கல் இன்ஃபார்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் அட்வைசர் போர்டு உறுப்பினர்

 

4. ஜெரால்ட் ஏஜ்னர்

4. ஜெரால்ட் ஏஜ்னர்

கூகுள் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்க்கும் பணியில் இருந்தவர் இந்த ஜெரால்ட் ஏஜ்னர். தற்போது இவர் லண்டனில் உள்ள இண்டர்நெட் பணியில் உள்ளார்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 முதல் 2006 வரை

கூகுளில் பணிபுரிந்த பதவிகள்: கூகுள் நிறுவனத்தின் முத்த பணியாளர்களின் உறுப்பினர் என லிங்க்ட் இன் பக்கம் கூறுகிறது.மேலும் இவரது முக்கியப் பணியாக டேட்டா செண்டர் மற்றும் இண்டர்நெட் சார்ந்த பணிகளில் இருந்தார். மேலும் ஹார்ட்வேர் டிசைன் மற்றும் கொள்முதல், ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பணிகளைக் கவனித்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் இருந்தவர். மேலும் கூகுள் நிறுவனத்தின் ஜூரிச் அலுவலகத்தின் கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுவியவரும் இவர்தான்

தற்போது பணிபுரியும் நிலை: இவருடைய லிங்க்ட் இன் பக்கத்தில் இருந்து தெரிய வருவது என்னவெனில் ஏஜ்னர் லண்டனில் தனியாகச் சொந்தமாக ஒரு இண்டர்நெட் புரபொசனில் உள்ளார். மேலும் இவர் லண்டன் நிறுவனத்தின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான மேக்ஸெல்லர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். மேலும் மெஷ்பவர் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சேர்மனாக உள்ளார். இந்த நிறுவனம் சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

5. சூசன் வோஜ்சிக்கி

5. சூசன் வோஜ்சிக்கி

கூகுள் நிறுவனத்தில் இன்றும் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவர் தான் இந்தச் சூசன் வோஜ்சிக்கி என்பவர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டுக் கூகுளின் யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகப் பொறுப்பேற்றார்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: ஏப்ரல் 1999 முதல் இப்போது வரை

கூகுள் நிறுவனத்தின் 16 ஊழியர் மற்றும் யூடியூப் நிறுவனத்தின் 9வது ஊழியராகச் சூசன் வோஜ்சிக்கி உள்ளார். கூகுளில் பணியில் சேர்வதற்கு முன்னர்ச் சூசன் வோஜ்சிக்கி மற்ற்ம் அவரது கணவர் கூகுள் நிறுவனத்திற்காகப் பல இடங்களை வாடகைக்குக் கொடுத்திருந்தனர் என்பதும் அதில் இருந்து இவர்களுக்கு வாடகையாக மாதம் ஒன்றுக்கு $1700 கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலை: கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருந்து வருகிறார்.

 

 

6. ஜோன் பிராடி

6. ஜோன் பிராடி

கூகுள் நிறுவனத்திற்குத் தேவையான பொருட்களைத் தயார் செய்யும் பங்குதாரராக ஜோன் பிராடி உள்ளார்

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 முதல் இப்போது வரை

கூகுள் நிறுவனத்திற்காக VP பொருட்களைத் தயார் செய்து சப்ளை செய்து வரும் இவர் சப்ளை செய்யும் முக்கியப் பொருட்கள் பயோகெமிஸ்ட்ரி சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகும்.

கூகுளில் தற்போதைய நிலை: VP பொருட்களைக் கூகுளுக்குச் சப்ளை செய்பவர்

 

7. கிரிஸ் ஸ்காராகிஸ்

7. கிரிஸ் ஸ்காராகிஸ்

கூகுள் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டிற்காகக் கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் வரை பணிபுரிந்தவர் தான் இந்தக் கிரிஸ் ஸ்காராகிஸ். தற்போது இவர் பிலிப் எப்.எம் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கென்யா வெஸ்ட் அவர்களின் அறக்கட்டளையை நிர்வகிப்பவர்

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 மே மாதம் முதல் 2005 ஆம் ஆண்டு மே மாதம் வரை

கூகுளில் வகித்த பதவிகள்: கூகுள் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர்

தற்போது பணிபுரியும் நிறுவனம்: பிலிப் எப்.எம் நிறுவனத்தின் நிறுவனராக உள்ள கிரிஸ் ஸ்காராகிஸ், கென்யா வெஸ்ட் அவர்களின் அறக்கட்டளையை நிர்வகிப்பவராகவும் உள்ளார்.

 

8. ராச்செல் சாம்பர்ஸ்

8. ராச்செல் சாம்பர்ஸ்

நெட்ஸ்கேப் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ராச்செல் சாம்பர்ஸ் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி கூகுளில் இணைந்தார்

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 மே மாதம் முதல் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை

கூகுளில் வகித்த பதவிகள்: ஆரம்பத்தில் கூகுள் நிறுவனத்தின் நிர்வாக உதவியாளராக இருந்த இவர் பின்னர் அதில் இருந்து விளம்பர விற்பனை ஒருங்கிணைப்பாளராக மாற்றப்பட்டார்.

தற்போதைய நிலை: தற்போது ராச்செல் சாம்பர்ஸ் சிஸ்கோ என்ற நிறுவனத்தின் திட்ட மேலாளராக உள்ளார். இதற்கு முன்னர் இதே நிறுவனத்தில் திட்ட மேலாளர் மற்றும் வாடிக்கையாளர்களின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்

 

9. ஸ்டீவ் ஸிம்மெல்

9. ஸ்டீவ் ஸிம்மெல்

கூகுள் நிறுவனத்தின் 13வது ஊழியராக இணைந்த ஸ்டீவ் ஸிம்மெல் அந்நிறுவனத்தில் வர்த்தக மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று ஏஞ்சல் முதலீட்டாளராக உள்ளார்

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 - 2004

கூகுளில் பணிபுரிந்த பதவி: வர்த்தக மேம்பாட்டு அதிகாரி

தற்போதைய நிலை: ஓய்வு பெற்றவர், தொழிலதிபர், ஏஞ்சல் முதலீட்டாளர், தந்தை ஆகிய பொறுப்புகளில் உள்ளார். மேலும் பேக் ஓப்ஸ், க்ரோடிரைஸ், ரூஸ்ட், மற்றும் கெய்ட் ஆகிய நிறுவனங்களின் தொடக்க முதலீட்டாளராகவும் உள்ளார்.

 

10. ஓமிட் கோர்டெச்டானி

10. ஓமிட் கோர்டெச்டானி

கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணிபுரிந்த ஓமிட் கோர்டெச்டானி, இந்நிறுவனத்தில் இருந்து விலகி பின்னர்ச் சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டரில் இணைந்தார்

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: ஜனவரி 1999 - ஆகஸ்ட் 2015

கூகுளில் பணிபுரிந்த பதவி: தலைமை வர்த்தக அதிகாரி மற்றும் தலைமை ஆலோசகர்

தற்போதைய நிலை: ஓமிட் கோர்டெச்டானி கடந்த 2015ஆம் ஆண்டுக் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகி அதன் பின்னர் நிர்வாகச் சேர்மனாக டிவிட்டரில் இணைந்தார். கடந்த ஆண்டு வரை டிவிட்டர் நிறுவனத்தின் $2 மில்லியன் பங்குகளை இவர் வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

11. சலார் கமாங்கர்

11. சலார் கமாங்கர்

கூகுள் நிறுவனத்தில் தற்போதும் பணிபுரிந்து வருபவர் தான் இந்தச் சலார் கமாங்கர். யூடியூப் மற்றும் வீடியோ பிரிவிற்கு இவர்தான் மூத்த VP என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 முதல் தற்போது வரை

கூகுளில் தற்போதைய நிலை: கூகுள் நிறுவனத்தில் 2014ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த சூசன் வோஜ்சிக்கி அவர்களுக்குப் பின்னர் யூடியூப் பிரிவின் சி.இ.ஓ ஆகப் பதவியேற்றவர் இந்தச் சலார் கமாங்கர் தற்போது யூடியூப் பிரிவிற்காக இவர் SVP பொருட்களை அளித்துக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

12. ஜார்ஜ் ஹாரிக்

12. ஜார்ஜ் ஹாரிக்

கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராகத் தனது பயணத்தை ஆரம்பித்தவர். ஆரம்பக்காலக் கட்டத்தில் கூகுளில் பணியாற்றிய மூன்று சாப்ட்வேர் பொறியாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கூகுள் இண்வெண்ட்சர் நிறுவனத்தின் ஆலோசகராகவும், imo.im என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 முதல் 2005 வரை

கூகுளில் வகித்த பதவிகள்: கூகுளில் தயாரிப்பு மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தவர். கூகுள் நிறுவனத்தின் ஆரம்பக்கால ஊழியர்களில் பத்தில் ஒருவரான இவர் ஜிமெயில், கூகுள் டாக், கூகுள் வீடியோ, பிக்காசா மற்றும் பல புதுமைகள் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். மேலும் ஆட்சென்ஸ் மற்றும் ஆட்வேர் ஆகியவற்றுக்குப் பின்புலமாக இருந்தவர்

தற்போதைய நிலை: imo.im நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் இவர் hslabs என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார். மேலும் கூகுள் வெண்ட்சர் பிரிவுக்கு ஆலோசகராகவும் உள்ளார்.

 

13. ஊர்ஸ் ஹோல்சில்

13. ஊர்ஸ் ஹோல்சில்

கூகுள் நிறுவனத்தின் ஆரம்பக்காலத் தொழில்நுட்ப உள்கட்டமைப்புப் பணிகளில் இருக்கும் ஊழியர்களில் ஒருவர்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 முதல் தற்போது வரை

கூகுளில் தற்போதைய நிலை: தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, நிறுவுதல், கூகுள் சேவையகங்களின் நெட்வொர்க்குகள் மற்றும் டேட்டா மையங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர். கூகுள் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்னர்ப் பார்பரா கணினி அறிவியல் பேராசிரியராக யூசி சாண்டா பார்பரா என்ற கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்தார்

 

14. ஹேரி சியாங்

14. ஹேரி சியாங்

கூகுள் நிறுவனத்தின் ஒரிஜினல் பொறியாளராக இருந்த இவர் தற்போது கேவியர், குவிக்கி மற்றும் பாட்ஜிவில்லி ஆகிய நிறுவனங்களின் முதலீட்டாளராக உள்ளார்.

கூகுளில் பணிபுரிந்த ஆண்டுகள்: ஜனவரி 1999 முதல் டிசம்பர் 2004 வரி

கூகுளில் பணிபுரிந்த பதவிகள்; பொறியாளர். கூகுளில் இவரது பட்டப்பெயர் ஸ்பைடர் மேன். ஏனெனில் இவர் கூகுள் நிறுவனத்தின் பொறியாளர் பணியைப் பறந்து பறந்து பார்ப்பார் என்பதால் அந்தப் பெயர் கிடைத்தது.

தற்போதைய நிலை: கேவியர், குவிக்கி மற்றும் பாட்ஜிவில்லி ஆகிய நிறுவனங்களின் முதலீட்டாளராக உள்ளார். மேலும் வீடு வாடகைக்கு அளிக்கும் ரூசிஃபி என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

 

15. ரேய் சிட்னி

15. ரேய் சிட்னி

கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக ஆரம்பக் காலகட்டத்திலேயே இணைந்தவர்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1999 ஜனவரி முதல் 2003 மார்ச் வரை கூகுளில் இணைவதற்கு முன்னர் ஐபிஓ-வில் பணிபுரிந்தவர்

கூகுளில் வகித்த பதவிகள்: சாப்ட்வேர் பொறியாளர்

தற்போதைய நிலை: மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுஅனமான பிக் ஜார்ஜ் வெண்ட்சர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர். மேலும் இவர் ஒரு பைலட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பேருந்து வசதி இல்லாத தாஹூ என்ற பகுதியில் பேருந்துகள் இயக்க $1 மில்லியன் டாலர் நன்கொடை கொடுத்தார்

 

16. ஹீதர் கெய்ர்ன்ஸ்

16. ஹீதர் கெய்ர்ன்ஸ்

கூகுள் நிறுவனத்தின் HR மேனேஜராகப் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று முதலீட்டாளராகவும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1998 முதல் 2005 வரி

கூகுளில் வகித்த பதவிகள்: HR மேனேஜர், இவர்தான் கூகுள் நிறுவனத்திற்காக முதல் 200 நபர்களைத் தேர்வு செய்தவர்.

தற்போதைய நிலை: பெண்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருபவர். மேலும் மாசூசெட்ஸ் என்ற பகுதியில் ஒரு சிறு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருவதாக இவருடைய லிங்க்ட் இன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

17. கிரேக் சில்வர்ஸ்டன்

17. கிரேக் சில்வர்ஸ்டன்

"கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லேரி மற்றும் ஜெர்ஜி ஆகியோர்களின் முதல் தேர்வு இவர்தான். கூகுளில் இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு விலகி பின்னர் ஒரு கல்வி நிறுவனத்தில் இணைந்தர்

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1998 முதல் 2012 வரை

கூகுளில் வகித்த பதவிகள்: பொறியாளர் மற்றும் டெக்னாலஜி இயக்குநர் உள்படப் பல்வேறு பதவிகளில் இருந்தவர். கூகுளின் 3வது ஊழியரான இவர் தேடுதளம் பிரபலம் அடையக் காரணமாக இருந்தவர்

தற்போதைய நிலை: கான் அகாடெமி என்ற கல்வி நிறுவனத்தின்
டீன் ஆக் உள்ளார்.

 

18. செர்ஜி பிரின்

18. செர்ஜி பிரின்

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான இவர் கூகுளுக்கு முந்தைய நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தவர்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1998 முதல் தற்போது வரை

கூகுளில் வகித்த பதவிகள்: கூகுளின் மற்ற இணை நிறுவனங்களைப் போலவே இவருடைய பணியும் மகத்தானது. கூகுள் X பிரிவின் பொறுப்பாளராக இருந்து அந்தப் பிரிவில் வளர்ச்சிக்காக 2015 வரை பணிபுரிந்தவர். தற்போது பிரின் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்

 

19. லேரி பேஜ்

19. லேரி பேஜ்

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான இவர் ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகவும் உள்ளார்.

கூகுளில் பணிபுரிந்த காலங்கள்: 1998 முதல் தற்போது வரை

கூகுளில் தற்போதைய நிலை: கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் கூகுளில் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Meet Google's first 19 employees..What are they doing now..?

Meet Google's first 19 employees..What are they doing now..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X