சீனா: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஓடி உடன் செயல்பட்டு வந்த கூட்டு நிறுவனத்தில் இருந்த தங்களது அனைத்து பங்குகளையும் விற்பனை செய்து விட்டதாக அறிவித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஒடியுடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியது. இதன்படி இரண்டு நிறுவனங்களும் ஆடம்பர மின்சார கார்களை தயாரித்து டென்சா என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்து வந்தன.

இது சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டாலும் இந்த பிராண்டில் கணிசமான அளவு பங்கு மெர்சிடிஸ் பென்ஸ் வசம் இருந்தது. பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர மற்றும் பிஒய்டி நிறுவனத்தின் மின்சார தொழில்நுட்பம் ஆகியவை இணைந்து ஆடம்பர மின்சார கார்கள் டென்சா என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
2011 ஆம் ஆண்டு முதல் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக செயல்பட்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு பென்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தில் தங்கள் கைவசம் இருந்த அனைத்து பங்குகளையும் பிஒய்டி நிறுவனத்திடமே வழங்கிவிட்டு வெளியேறிவிட்டது.
இந்த கூட்டு நிறுவனத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் 50 சதவீத பங்குகளையும் , பிஒய்டி நிறுவனம் 50 சதவீத பங்குகளையும் கொண்டு இருந்தது. ஆனால் தங்களுடைய தொழில்நுட்பம் தற்போதைய டென்சா கார்களில் பயன்படுத்தும் வகையில் இல்லை என்பதால் இந்த நிறுவனத்துடன் தாங்கள் இணைந்து செயல்படுவது சரியாக இருக்காது என பென்ஸ் நிறுவனம் அறிவித்தது. படிப்படியாக தங்கள் கைவசம் இருந்த பங்குகளை விற்பனை செய்தது. தற்போது கைவசம் இருந்த 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்து விட்டதாக அறிவித்துள்ளது.
டென்சா நிறுவனம் தற்போது Z9GT மாடல் கார்களை தயாரித்து வருகிறது. இது கூடிய விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில் பென்ஸ் நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் தற்போது சீனாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அண்மையில் கூட கனடா அரசு சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications