பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என மக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கிய செயலிகளைக் கொண்டிருக்கும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனம், செயற்கை நுண்ணறிவு பிரிவில் தனித்து இயங்கும் ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தி, சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ஓபன் AI நிறுவனத்துடன் நேரடி போட்டியில் இறங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த புதிய AI அசிஸ்டென்ட், மெட்டாவின் லாமா AI மாடலில் இயங்கும் என தெரிவித்துள்ளது. இதில், ஏஐ சாட்பாட் சேவை இருப்பதைத் தாண்டி, உலகளாவிய பயனர்கள் இந்த கருவியுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர் என்பதைக் காட்டும் ஒரு 'டிஸ்கவர் ஃபீட்' உள்ளது. இது கிட்டத்தட்ட பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் feed போன்றது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், மெட்டாவின் இந்த முயற்சி, தொழில்நுட்ப உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா AI, 2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2024 ஏப்ரலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றின் தேடல் அம்சத்தை மாற்றியது.
இந்த புதிய செயலி மூலம் 2025 ஆம் ஆண்டு மெட்டா AI ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்தார். ஜனவரி 2025 இல் மெட்டா AI-யின் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் 700 மில்லியனாக உயர்ந்தது.
மெட்டாவின் புதிய AI செயலி, சாட்ஜிபிடி போன்ற மற்ற AI தளங்களுடன் நேரடியாக போட்டியிட உள்ளது. இந்த AI பந்தயத்தில், ஒப்பன் ஏஐ-யின் சாட்ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் க்ராக் மற்றும் கூகுளின் ஜெமினி ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
மெட்டா, 2023 செப்டம்பரில் முதன்முதலில் ஒரு AI சாட்பாட் அறிமுகப்படுத்தியது. இது, பயனர் கேள்விகளின் அடிப்படையில் பதில்களை வழங்குவதற்கும், படங்களை உருவாக்குவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு உருவாக்க AI-அடிப்படையிலான டிஜிட்டல் அசிஸ்டென்ட் ஆக இருந்தது.
2024 ஏப்ரலில், மெட்டா இந்த AI சேவையைத் தனது முக்கிய பயன்பாடுகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றின் சர்ச் சேவைக்கு மாற்றாக அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு AI தொழில்நுட்பத்தை மெட்டா பயன்படுத்த முதல் அடியை எடுத்தது வைத்தது. தற்போது முக்கிய கட்டமான Gork, ChatGPT, ஜெமினி ஆகியவற்றுடன் போட்டிப்போடும் வகையில் தனி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஏஐ போட்டியில் யார் மிகப்பெரிய வெற்றியை அடைவார்கள் என்பதில் பெரும் போட்டி உள்ளது. ஒருபக்கம் கூகுள் சர்ச் தளம் சிறப்பாக இருக்கும் காரணத்தால் ஜெமினி பல இடத்தில் சிறந்து விளங்கி அதிக வருமானம் ஈட்ட துவங்கியுள்ளது. ஓப்பன் ஏஐ தளத்தில் பலதரப்பட்ட சேவைகளின் முன்னோடியாக இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்றுள்ளது ஆனால் இது Non profit தளமாகவும், சர்ச் டேட்டாவில் பின்தங்கியும் உள்ளது. கடைசியாக X நிறுவனத்தின் Gork தற்போது வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியுள்ளது.
இத்தகைய போட்டியில் சமுக வலைத்தளத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் மெட்டா களத்தில் குதித்துள்ளது. இதேபோல் மெட்டா-விடம் தனிநபர் தகவல்கள் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த ஏஐ போட்டியில் கூடுதல் பலம் பெறுமா என்பது காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மெட்டாவின் இந்த புதிய முயற்சி, பயனர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய AI சந்தையில் முன்னணி இடத்தைப் பிடிக்கவும் உதவும்.


Click it and Unblock the Notifications