அமெரிக்கா: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மெட்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனம் தான் மெட்டா. மார்க் ஜக்கர்பர்க் இதனை தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்.
மெட்டா நிறுவனம் 100 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்திருக்கிறது. இவர்கள் மெட்டா நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் மெட்டா நிறுவனம் தங்களுடைய ரியாலிட்டி லேப் டிவிஷன் பிரிவில் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட் பிரிவில் பணியாற்றி வந்த 100 ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கி உள்ளது.

தங்களுடைய நிறுவனத்திற்குள் பல்வேறு குழுவை மறு கட்டமைப்பு செய்து வருவதாக தெரிவித்திருக்கும் மெட்டா நிறுவனம் தங்கள் நிறுவன செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக அறிவித்துள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வரக்கூடிய மெட்டா நிறுவனம் இந்த பிரிவில் செயல் திறனை அதிகரிப்பதற்காக பணி நீக்க நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறியுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகளுக்கு கன்டண்டுகளை மேம்படுத்தி தரக்கூடிய பிரிவிலிருந்து ஊழியர்கள் தான் இந்த பணி நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தங்கள் நிறுவனத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மற்ற பிரிவுகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பல்வேறு ஊழியர்களுக்கான பொறுப்புகள் மாற்றி தரப்பட்டுள்ளதாக மெடா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிடுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி சம்பந்தப்பட்ட பொருட்கள் சிறந்த விற்பனையை எட்டும் என எதிர்பார்த்தது மெடா. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு இந்த பிரிவு இதுவரை மக்களிடம் சென்று சேரவில்லை.
இந்த சூழலில் தான் ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் பொறுப்புகளை மாற்றி அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . மெட்டா ஏற்கனவே தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வந்த 3 ஆயிரத்து 600 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. தாங்கள் எதிர்பார்த்த செயல்திறன் அவர்களிடம் இல்லை என்ற காரணத்தினாலேயே இத்தனை பேரை வேலை இருந்து நீக்குவதாக கூறியிருந்தது. தங்களுடைய விரிச்சுவல் ரியாலிட்டி துறையில் தொடர்ந்து ஃபிட்னஸ் மற்றும் கேமிங் பிரிவில் கவனம் செலுத்தப்படும் என்று மெடா நிறுவனம் கூறியிருக்கிறது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications