சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: உலக அளவில் தற்போது டெக் நிறுவனங்கள் அனைத்துமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் சாட் ஜிபிடி தான்முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மெட்டா நிறுவனம்: ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடியை அறிமுகம் செய்த பின்னர் கூகுளின் ஜெமினி, எக்ஸின் குரோக் , மெட்டாவின் மெட்டா ஏஐ ஆகிய செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன. இருந்தாலும் மக்களிடையே பிரபலமாக இருப்பது சாட் ஜிபிடி தான். இந்த நிலையில் சாட் ஜிபிடி நிறுவன ஊழியர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுப்பதாக கூறி மெட்டா நிறுவனம் அவர்களை பணிக்கு அமர்த்த முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாட் ஜிபிடியில் வலைவீசும் மெட்டா: ஓபன் ஏஐ நிறுவன தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசி இருக்கும் சாம் ஆல்ட்மேன், மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜக்கர்பர்க் , எங்களின் சாட் ஜிபிடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி அவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

100 மில்லியன் டாலர் சம்பளம்: சாட் ஜிபிடியில் இருக்கும் மூத்த நிலை அதிகாரிகளுக்கு 100 மில்லியன் டாலர்கள் வரை சம்பளம் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என மார்க் கூறியிருப்பதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 860 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு அதிக சம்பளம் கொடுத்தாலும் எங்கள் ஊழியர்கள் மெட்டாவுக்கு செல்லாமல் இங்கேயே இருக்க விரும்புகின்றனர், அதற்கு எங்களின் பணி கலாச்சாரமே காரணம் என கூறியுள்ளார்.
கூகுள் ஊழியர்களுக்கும் வலைவீச்சு: மெட்டா நிறுவனம் ஓபன் ஏஐ மட்டுமில்லாமல் கூகுளின் டீப் மைண்ட் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை கூட தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறதாம். மெட்டா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவு பிரிவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் முதலிடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மெட்டா நிறுவனம். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த துறையில் முன்னேற முடியாமல் போனதால் எங்கள் நிறுவன ஊழியர்களை அதிக சம்பளத்திற்கு வேலைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறது மெட்டா என சாம் ஆல்ட்மேன் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications