உலகின் முன்னணி சமுக வலைத்தளம் மற்றும் டெக் நிறுவனமாக விளங்கும் மெட்டா Mark Zuckerberg-ன் தலைமையில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் உலகின் மிகச் சிறந்த அணியை உருவாக்கி வருகிறது.
இதற்காக மார்க் ஜூக்கர்பெர்க் OpenAI, Google DeepMind மற்றும் Anthropic போன்ற ஏஐ துறையில் சிறந்து விளங்கம் நிறுவனங்களில் இருந்து முன்னணி ஏஐ வல்லுனர்களையும், ஆராய்ச்சியாளர்களையு்ம பெரும் தொகை கொடுத்து ஈர்த்து வருகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற மார்க் ஜூக்கர்பெர்க் Meta Superintelligence Labs (MSL) என்ற புதிய பிரிவை தொடங்கியுள்ளார்.

மெட்டாவின் Superintelligence Labs மூலம் உலகின் மிகவும் மேம்பட்ட AI தளத்தை உருவாக்கு மார்க் ஜூக்கப்பெர்க் இலக்கு வைத்துள்ளார். இந்த ஏஐ தளம் கூகுளின் ஜெமினி, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-விட சிறப்பாக இல்லையென்றாலும் இதற்கு போட்டியாக ஒரு தளத்தை உருவாக்கி AI RACE-ல் முந்த வேண்டும் என்ற முடிவில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த MSL பிரிவை வழிநடத்த Alexandr Wang மற்றும் Nat Friedman ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் Alexandr Wang-ஐ எப்படியாவது Meta நிறுவனத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக அவர் பணியாற்றிய scale என்னும் நிறுவனத்தில் 14 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து பெருமளவிலான பங்குகளை வாங்கியுள்ளார். இதில் Nat Friedman என்பவர் பிரபல GITHUB-ன் முன்னாள் சிஇஓ ஆவார்.
இவர்களுடன் பணியாற்ற Jiahui Yu, Shengjia Zhao, Huiwen Chang, Trapit Bansal, Shuchao Bi, Ji Lin, Joel Pobar, Jack Rae, Hongyu Ren, Johan Schalkwyk மற்றும் Pei Sun போன்ற முன்னணி ஏஐ வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கடந்த ஒரு மாதத்தில் பெரும் தொகை கொடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் தனது MSL நிறுவனத்தில் சேர்த்துள்ளார்.
இவர்கள் ChatGPT, GPT-4, GPT-4o, மற்றும் Gemini போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்கள். உதாரணமாக, Jiahui Yu, GPT-4 மற்றும் GPT-4o உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார், அதேபோல் Shengjia Zhao, ChatGPT-உருவாக்கியவர்களின் ஒருவராக உள்ளார். இவர்களின் திறமைகள் அனைத்தும் தற்போது META-வுக்கு கிடைத்துள்ளது.
மெட்டாவின் இந்த முயற்சி, OpenAI மற்றும் Google-ஐப் போல ஏஐ துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக Mark Zuckerberg, பெரும் முதலீட்டைச் செய்து இவர்கள ஈர்த்துள்ளார்.
இதில் முக்கியமாக Jiahui Yu-விற்கு 100 மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டதாக வதந்திகள் உள்ளன, இதுதான் தற்போது டெக் உலகின் முக்கிய பேசுபொருளாக உள்ளது. இந்த ஏஐ சூப்பர் ஸ்டார்கள் AI துறையில் கில்லி என்றால் மிகையில்லை.
தற்போது நாம் பயன்படுத்தும் ஏஐ தொழில்நுட்பத்தின் சிந்தனை, பட உருவாக்கம் மற்றும் குரல் தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்கள் இவர்கள். இந்த சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் ஒரே இலக்குடன் இணைந்து பணியாற்றும் போது அடுத்து என்ன நடக்கும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
உதாரணமாக, மெட்டா சமீபத்தில் சேர்த்த பெரும் தலைகளில் Trapit Bansal முக்கியமானவர், இவர் ஒரு இந்தியர் என்பது மட்டும் அல்லாமல் ஏஐ எப்படி படிப்படியாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை உருவாக்கியவர், இதில் Huiwen Chang ஏஐ மூலம் எப்படி புகைப்படம் உருவாக்க வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்.
மெட்டா, பணத்தை காட்டி பெரும் தலைகளை ஈர்ப்பது மூலம் அமெரிக்க டெக் உலகின் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications