மெக்சிகோ அரசு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1,400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரிகளை அறிவித்துள்ளது. இந்த வரி இந்தியா, சீனா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற FTA ஒப்பந்தம் செய்யப்படாத ஆசிய நாடுகளின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
2026 முதல் செயல்படுத்தப்படும் இந்த வரி முறை, மெக்சிகோவின் பழைய சுதந்திர வர்த்தக கொள்கையிலிருந்து தலைகீழாக மாறியுள்ளது. மேலும் இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப்-ன் விரி விதிப்புக்கு முன்பும் சரி, பின்பும் சரி இந்தியா தொழிற்துறை, மெக்சிகோவை, லத்தீன் அமெரிக்காவில் ஏற்றுமதி அதிகரிக்க அதிகளவில் பயன்படுத்தி வந்தது. 2025இல் இந்தியாவின் மெக்சிகோவுக்கு ஏற்றுமதி 8.5 பில்லியன் டாலர் மதிப்புடையது. இதில் குறிப்பிடத்தக்க சரக்கு மற்றும் சேவைகள் அமெரிக்காவுக்கு கைமாற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரிபாகங்கள் இந்த வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இதை தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், டெக்ஸ்டைல், இரும்பு, ஸ்டீல், பிளாஸ்டிக், காலணிகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது.
USMCA என்றால் என்ன..?
மெக்சிகோ-வின் இந்த புதிய வரி விதிப்பு முடிவு அமெரிக்காவின் அழுத்தத்தால் வந்தது என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். 2026இல் USMCA என்னும் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்த மறு ஆய்வு செய்யப்பட உள்ள நிலையில், இதற்கு முன்பு அமெரிக்காவுக்கு சாதகமாகவும், டிரம்ப்-ஐ குளிர்விக்கும் வகையில் மெக்சிகோ தனது உள்நாட்டு தொழில்துறை பாதுகாக்கும் விதிமாக இந்த வரியை விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50% வரி விதித்தது போல, மெக்சிகோயும் ஆசிய ஏற்றுமதியை கட்டுப்படுத்த இந்தியா மீது அதிகப்படியாக 50 சதவீத வரியை விதித்துள்ளது. மெக்சிகோ பெரும்பாலான பொருட்களுக்கு 35 சதவீத வரி மட்டுமே விதித்துள்ளது.
மெக்சிகோ லத்தீன் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு, வட அமெரிக்காவுக்கான முக்கிய நுழைவாயிலாக உள்ளது. இந்திய நிறுவனங்கள் மெக்சிகோவைப் பயன்படுத்தி அமெரிக்க சந்தைக்கு பொருட்களை எளிதாக அனுப்பி வந்தன. இப்போது 35-50 சதவீத வரி காரணமாக இந்திய பொருட்களின் விலை மெக்சிகோவில் பெரிதும் உயரும்.
இதனால் இந்திய பொருட்களுக்கான போட்டி திறன் குறையும், ஏற்றுமதி அளவு சரிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஜவுளி, ஆடை, பிளாஸ்டிக், உலோகம், காலணி, ஆட்டோ பாகங்கள் போன்ற துறைகள் அதிகம் பாதிக்கப்படும். ஏற்கனவே அமெரிக்கா வரியால் பாதித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு இது புதிய பாதிப்பாக உள்ளது.
இந்தியா மெக்சிகோவுடன் இதுவரை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) செய்து கொள்ளவில்லை. இப்போது புதிய வரி விதிக்கப்பட்ட காரணத்தால் இந்திய பொருட்கள் மெக்சிகோவில் விலை உயர்ந்து, விற்பனை குறையும். இதனால் ஏற்றுமதியாளர்கள் வேறு சந்தைகளைத் தேட வேண்டிய நிலை மீண்டும் உருவாகியுள்ளது. இதேவேளையில் அமெரிக்காவை தொடர்ந்து மெக்சிகோ உடனும் இந்திய அரசு FTA பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications