சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் லிங்கிடு இன் நிறுவனத்தை 2 வருடங்களுக்கு முன்பு 26.2 பில்லியன் டாலருக்கு வாங்கியதைப் போல் தற்போது கிட்ஹப் என்னும் கம்பியூட்டர் கோடு ரெப்பாசிடரி நிறுவனத்தைச் சுமார் 7.5 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
7.5 பில்லியன் டாலர்
மைக்ரோசாப்ட் இந்த 7.5 பில்லலியன் டாலர் தொகையைப் பங்குகளாகக் கிட்ஹப் நிறுவனத்திற்கு அளிக்கிறது. கிட்ஹப் நிறுவன சேவைகளை ஆப்பிள், அமேசான், கூகிள் எனப் பல பெரும் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகிறது.
வர்த்தகம்
கிட்ஹப் நிறுவனத்தில் சுமார் 85 மில்லியன் பதிவுகளும், 28 மில்லியன் மென்பொருள் வல்லுனர்களும் உள்ளனர்.
தலைவர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைக் கிட்ஹப் கைப்பற்றிய நிலையில் இந்நிறுவனத்தின் சிஇஓ நேட் பிரைடுமேன் மற்றும் கிட்ஹப் நிறுவனத்தின் துணை நிறுவனரான கிரிஸ் வேன்ஸ்ட்ராத் ஆகியோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் மற்றும் ஏஐ பிரிவு தலைவர் ஸ்காட் குத்திரி கீழ் பணியாற்ற உள்ளனர்.
ஏன் வாங்கியது..
கிட்ஹப் நிறுவனத்தைப் போலவே மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கோடுபிலெக்ஸ் என்னும் சேவை இருந்தது, இது கிட்ஹப் உடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போன நிலையில் இந்நிறுவனத்தையே மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது.
பங்குகள் உயர்வு
கிட்ஹப் நிறுவனத்தை கைப்பற்றிய காரணத்தால் நாஸ்டாக் பங்குச்சந்தையில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 0.87 சதவீதம் உயர்ந்து 101.67 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
முதல் சிக்சர்
2016, செப்டம்பர் மாதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம், தொழில் வல்லுனர்களுக்காகப் பிரத்தியேகமாக விளங்கும் சமுகவலைத்தள நிறுவனமான லிங்க்டுஇன் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது.
சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓ-வாக பதவியேற்றி பின் இந்நிறுவனத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவாக இது கருதப்பட்டது.
மறுசீரமைப்பு
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது அமேசானுக்குப் போட்டியாகக் கிளவுட் சேவை மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
இதன் காரணமாகவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகத்தில் சமீபத்தில் மறுசீரமைப்புக்கான தேவை ஏற்பட்டது.
விண்டோஸ்
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவாகக் கருதப்படும் விண்டோஸ் மற்றும் டிவைஸ் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவராக இருந்த டெரி மையர்சன் தற்போது நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இரு குழுக்கள்
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருள் பயன்பாட்டைக் குறித்து ஆய்வு செய்ய இரு குழுக்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதிலும், வர்த்தகத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்திருக்க உதவும் என மைக்ரோசாப்ட் நம்புகிறது.


Click it and Unblock the Notifications