மைக்ரோசாப்ட் நிறுவனம் தாங்கள் எதிர்பார்த்த அளவு செயல் திறனை வெளிப்படுத்தாத ஊழியர்களுக்கு அவர்களாகவே வேலையை விட்டு செல்வதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.இவ்வாறு தாங்களாகவே வேலையை விட்டு செல்லும். ஊழியர்களுக்கு 16 வாரத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் எதிர்பார்த்த செயல் திறனை வெளிப்படுத்தாத ஊழியர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. அவர்களுக்கு தாங்களாகவே வேலை விட்டு செல்வதற்கான திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் படி ஊழியர்கள் தாங்களாகவே வேலையை விட்டு செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்கு அதற்காக 16 வாரங்களுக்கான சம்பளம் அதாவது நான்கு மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்களாகவே வேலையை விட்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்காத ஊழியர்களுக்கு performance improvement plan என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் இணையும் ஊழியர்களுக்கு அவர்களுடைய செயல் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பிலும் அவர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள். அந்த சமயத்தில் இந்த 16 வார சம்பளம் அவர்களுக்கு கிடைக்காது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் தங்கள் நிறுவனத்தில் பெரிய அளவில் கட்டமைப்பை மாற்றி வருகிறது. இந்த சூழலில் தான் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுக்காமல் அவர்களுக்கு தாங்களாகவே வேலை விட்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறது. தங்களுடைய நிறுவனம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் வெளிப்படை தன்மை இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை மனிதவளத்துறை அதிகாரி கோல்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் performance improvement plan திட்டத்தில் இணைந்து அதில் தேர்ச்சி பெறாத ஊழியர்கள் மீண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர முடியாது என்றும் நிறுவனத்திற்கு உள்ளேயே பொறுப்புகளை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது .
உலகளவில் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. கூகுள், அமேசான், இண்டெல் ஆகிய நிறுவனங்களின் வரிசையில் மைக்ரோசாப்டும் ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் ஜனவரி மாதம் தான் 3,600 ஊழியர்களை எதிர்பார்த்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என கூறி பணிநீக்கம் செய்தது. இண்டெல் நிறுவனம் 20% ஊழியர்களை நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 234 நிறுவனங்கள் 45,656 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 439 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications