அமெரிக்கா: அமெரிக்க பங்குச்சந்தையில் சந்தை மூலதன அடிப்படையில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. முதலிடத்தில் இருந்த ஆப்பிள் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் சந்தை மூலதன அடிப்படையில் நம்பர் ஒன் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் இடம் பிடித்திருக்கிறது. இதன்படி இந்த வார இறுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.235 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கிறது. முதலிடத்தில் இருந்த ஆப்பிளை பின்னுக்கு தள்ளி மைக்ரோசாஃப்ட் இந்த இடத்தை பிடித்திருக்கிறது .வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.078 டாலர்களாக இருந்தது.

இந்த பட்டியலில் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா 2.76 மில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி முடிவுகள் வெளியாகின. அதில் முன்பு வெளியிட்ட கணிப்பை விட நிறுவனத்தின் நிதி நிலவரம் வலுவாக இருக்கிறது. இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயர்ந்தது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்திய நாதெல்லா முதலீட்டாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவு வலுவான வளர்ச்சியை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஓராண்டு காலமாகவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனமும் தங்களுடைய முதல் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான ஐபோன்களை விற்பனை செய்திருக்கிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்திருப்பதால் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களை சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெரிய அளவில் உயராமலேயே இருக்கிறது. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்கள் மற்றும் ஐபோன்களுக்கு தேவையான உபகரணங்களுக்கு சீனாவை தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்திருப்பதால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
எனவே தான் ஆப்பிள் நிறுவனம் சீனாவை விடுத்து இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தியை அதிகப்படுத்தும் பணிகளை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனங்கள் ஐபோன்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications