லண்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் லண்டனில் இயங்கி வரும் தனது ஸ்கைப் அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளது. இதனால் 400 ஊழியர்கள் வரை வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில பொறியாளர்களை நீக்கிவிட்டுப் பிற வல்லுநர்களுக்கு வேலையை அதிகரிக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளதால் உலகளவில் ஸ்கைப் மற்றும் யம்மர் பிரிவுகளில் இருந்து பணியாளர்கள் நீக்கப்படலாம் என்று ஃபினான்ஷியல் டைம்ஸ் கூறியுள்ளது.
பிற அலுவலகங்கள்
லண்டன் அலுவலகம் மூடப்பட்டாலும் ஐரோப்பாவில் ரெட்மாண்ட், பாலோ ஆல்டோ, வான்கூவர் பொன்ற இடங்களில் இயங்கி வரும் பல அலுவகலகங்கள் தொடர்ந்து இயங்கும் என்று கூறப்படிகிறது.
முன்னால் ஊழியர்கள்
ஸ்கைப் நிறுவனத்தின் முன்னால் ஊழியர்கள் கூறுகையில் மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தின் மொத்த நடவடிக்கையையும் தங்களே கவனிக்க தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்கிறது இந்தப் பணி நீக்கத்திற்கு இதுவே காரணம் என்று கூறியுள்ளனர்.
ஸ்கைப் செயலி
ஸ்கைப் செயலி உலகளவில் மிகவும் பிரபலமான சாட்டிங் செயலியாகும், இதற்குப் பல தரப்பினரிடம் இருந்து போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெஸ்செஞ்சர்கள் போன்ற பல செயலிகள் ஸ்கைப் நிறுவனத்தை விட அதிக பயனர்களுடன் இருக்கின்றன.
இருந்தாலும் வணிக ரீதியான வீடியோ சாட்டிங் போன்றவற்றிற்கு ஸ்கைப் செயலியே மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
2,850 பணியாளர்கள் பணி நீக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வன்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளில் இருந்து மேலும் 2,850 பணியாளர்களை வேலையை விட்டு துரத்தும் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் வருடாந்திர அமெரிக்க செக்யூரிட்டிஸ் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications