ஹெல்சின்கி: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றிய பின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் அதற்கான மென்பொருள் உருவாக்குவதில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி வருகிறது. ஆனாலும் சந்தையில் ஆண்ட்ராய்டு உடன் போட்டி போட முடியாமல் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது மைக்ரோசாப்ட்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இருந்து சுமார் 1,850 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதுவும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பின்லாந்து நாட்டு அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்களை வெளியேற்ற மைக்ரோசாப்ட் கட்டம் கட்டியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்கியது. சத்ய நடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1,850 ஊழியர்களின் பணிநீக்கத்தின் மூலம் வருடத்திற்குச் சுமார் 950 மில்லியன் டாலர் அளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவின் வர்த்தகம் தற்போது மந்தமாக உள்ள நிலையில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை வெளியேற்றவும், இதன் நிறுவன செலவுகளில் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும் எனவும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. இப்பணிநீக்கத்தின் மூலம் விண்டோஸ் 10 மென்பொருளின் மேம்பாட்டு பணிகள் எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 அறிமுகத்தின் மூலம் தனது லூமியா வாடிக்கையாளர்களுக்கும் முழுமையாகச் சேவை அளிக்க முடியும் என மைக்ரோசாப்ட் நம்புகிறது. தற்போது நிறுவனத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். விண்டோஸ் 10 அறிமுகம் ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாமல் பிற அனைத்து உபகரணங்களையும் சார்ந்து இருக்கும். இதனுடன் மொபைல் தளத்தில் கிளவுட் சேவையும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் எனச் சத்ய நடெல்லா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தின் முடிவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வர்த்தகம் சந்தையில் 350 மில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை 7.2 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியது. ஆனால் இதன் முதலீட்டுக்கு ஏற்ப வருமானத்தைப் பார்க்க முடியாமல் தவித்து வருகிறது மைக்ரோசாப்ட்.
2014ஆம் ஆண்டு
950 மில்லியன் டாலர்
பணிநீக்கம்
விண்டோஸ் 10
சத்ய நடெல்லா
கிளவுட் சேவை
ஸ்மார்ட்போன் வர்த்தகம்
நோக்கியா
நியூஸ்லெட்டர்
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications