மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் சுமார் 3 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலையில் இருக்கும் சுமார் 6000 ஊழியர்கள் பாதிக்கப்பட இருக்கின்றனர். இவர்களில் சுமார் 2000 பேர் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் என தெரிய வருகிறது.
அனைத்து குழுவில் இருந்தும் அனைத்து பிரிவிலிருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் நடைபெறுகிறது என மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருப்பதால் நிறுவன செயல்பாடுகளை மறுக்கட்டமைப்பு செய்வதாகவும் இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி செய்த ஊழியர் ஒருவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அந்தப் பெண் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு பதவிகளில் இருந்த அவர் பணிநீக்கம் செய்யப்படும் போது மேலாளர் பொறுப்பு வகித்து வந்தார். தான் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர், "மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து என்னை பணிநீக்கம் செய்து விட்டார்கள். திடீரென என்னுடைய கூகுள் காலண்டரில் ஒரு மீட்டிங் நோட்டிஃபிகேஷன் வந்தது. நான் நினைத்தேன் அது 2026 ஆம் ஆண்டில் நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும் புதிய டாஸ்க் குறித்தும் இருக்கும் என எதிர்பார்த்தேன். இதற்கு முன்பு நான் பார்த்திராத ஒரு நபர் அந்த அழைப்பில் இணைந்தார். அப்பொழுது உணர்ந்து கொண்டேன் நானும் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டு காலமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தனக்கு மிகச்சிறந்த ஒரு பணி அனுபவம் கிடைத்ததாக தெரிவித்திருக்கும் அவர் தற்போது வேலைவாய்ப்பு சந்தை மிக மோசமாக இருக்கிறது இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பாசிட்டிவாக இருங்கள் , முயற்சி செய்யுங்கள் என அவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பலரும் அடுத்த வேலையை தேட தொடங்குங்கள் என்றும் ஒரு சிலர் தங்கள் நிறுவனங்களில் வேலை பெற்று தர தயாராக இருக்கிறோம் என உதவிகரமும் நீட்டி இருக்கின்றனர்.
மொத்தம் 2, 28,000 ஊழியர்களைக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைகளை மிக தீவிரமாக கையில் எடுத்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் மார்ச் மாத காலாண்டிற்கான நிதி முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஏஐ பிரிவுகள் நல்ல லாபத்தை தந்திருந்தன என தெரிவித்திருந்தது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications