உலகின் முன்னணி டெக் நிறுவனமாக மைக்ரோசாப்ட் செயல்பட்டு வருகிறது. மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சத்ய நாதெல்லா செயல்படுகிறார்.
மைக்ரோசாப்ட் தங்களுடைய நிறுவன ஊழியர்களுக்கு புதிதாக ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறது .அதுதான் தற்போது டெக் உலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாகவும் மாறியிருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கின. மைக்ரோசாப்டும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி தந்தது.

கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்துவிட்டது அதன் பின்னர் இயல்பு நிலையும் திரும்பிவிட்டது . இருந்தாலும் பல்வேறு ஊழியர்களும் தொடர்ந்து வொர்க் ஃபிரம் ஹோம் முறையில் பணியாற்றுவதற்கு விரும்புகின்றனர். இந்த சூழலில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
2026 பிப்ரவரி முதல் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் வாரத்தில் மூன்று நாள் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இவ்வாறு அலுவலகம் வராத ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்காது என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சலும் உஇது தொடர்பாஜ ஹெச்.ஆர் அதிகாரிகள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
முதல் கட்டமாக மைக்ரோசாப்டின் சியாட்டில் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி மற்றும் அதனை சுற்றி 50 மைல் தொலைவில் வசிக்கக்கூடிய ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் இல்லை என்றால் நிறுவனத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை எதிர் பார்க்காதீர்கள் என கூறப்பட்டிருக்கிறது . மேலும் ஊழியர்கள் ஓரிடத்தில் ஒன்றாக இணைந்து வேலை செய்யும்போது செயல் திறன் அதிகரிப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் ஓரிடத்தில் அனைத்து ஊழியர்களும் சேர்ந்து வேலை செய்யும்போது அதிக எனர்ஜியோடு வேலை செய்கிறார்கள் அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகம் வரவேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹெச்ஆர் அதிகாரியான ஏமி கோல்மேன் மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களை அவர்களின் செயல் திறன் அடிப்படையில் வேலையில் இருந்து நீக்கம் செய்து வருகிறது.
தற்போது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அது அவர்களின் பெர்ஃபார்மன்ஸ் ரிவூய்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அலுவலகத்திற்கு வராதவர்கள் செயல் திறன் அற்றவர்களாக பட்டியலிடப்பட்டு பின்னாளில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது மாறி இருக்கிறது. வீட்டிலிருந்து பணிபுரியக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை பெறுவதில் சிரமப்படுவார்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications