இஸ்லாமாபாத், பாகிஸ்தான்: உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானிலும் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக கூறி இருக்கிறது.
இது பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட 25 ஆண்டு காலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய சேவையை முடித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்னேற்றம் என பல்வேறு நம்பிக்கைகளோடு கால் பதித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறது .மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் .

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் தன்னுடைய முதல் அலுவலகத்தை நிறுவியது. இந்த நிலையில் 25 ஆண்டுகள் கழித்து அதே ஜூன் மாதம் முடிந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டு நிறுவனத்தையும் மூடி இருக்கிறது. மைக்ரோசாப்ட் வருகையால் பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்பத் துறை நல்ல வளர்ச்சி அடைந்தது, குறிப்பாக உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ஐடி துறை நோக்கி பயணப்பட தொடங்கினர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் நிறுவப்படுவதற்கு உறுதுணையாக இருந்த ஜெபார் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் அலுவலகத்தை அமைத்தது நிறுவனத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை என்னிடம் வழங்கியது, அது வெறும் வேலை அல்ல பல ஆயிரம் பேருக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பாகத்தான் இருந்தது எனக் கூறியிருக்கிறார்.
அரசின் திட்டங்களை டிஜிட்டல் மயமாக்கியதில் மைக்ரோசாப்டின் பங்கு முக்கியமானதாக இருந்தது என குறிப்பிடும் அவர் நவீன ஐடி வேலைகளை பாகிஸ்தானிற்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் அறிமுகம் செய்த ஒரு நிறுவனம் தற்போது நாட்டை விட்டே வெளியேறுகிறது என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்ற வந்த ஊழியர்களும் நிறுவன அலுவலகம் மூடப்பட்டதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்தெந்த நாடுகளில் எல்லாம் தங்கள் நிறுவனத்திற்கு வளர்வதற்கான வாய்ப்பும் சந்தையும் இல்லையோ அங்கிருந்து எல்லாம் செயல்பாடுகளையும் நிறுத்தி வருகிறது. பாகிஸ்தானில் அலுவலகத்தை மூடினாலும் மூன்றாம் தரப்பு கூட்டு நிறுவனங்களோடு இணைந்து நாட்டுக்கு தேவையான ஐடி துறை சார்ந்த சேவைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து வழங்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications