மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க மற்றும் போர் முயற்சிகளின் போது உதவத் தொழில்நுட்பம் வாய்ந்த அமைப்புகளுக்கான முன்மாதிரியை வழங்குவதற்கான 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினை அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் இந்த ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் பெற்று இருப்பது குறித்து அதன் இணையதளத்திலும் குறிப்பிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் அளிக்க உள்ள இந்த அமைப்புகள் இராணுவ வீரர்களுக்கு மிகத் துல்லியமான முடிவுகளை எடுக்க உதவும் என்று அதன் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் இந்த மதிப்பு வாய்ந்த திட்டத்தினைப் பெற நடைபெற்ற ஏலத்தில் மேஜிக் லீபுடபட அமெரிக்காவின் முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல கலந்துக்கொண்டன் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications