கிரிப்டோகரன்சி சந்தையின் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் பிட்காயினில் எலான் மஸ்க் தலைவராக இருக்கும் டெஸ்லா 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்தது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் MicroStrategy Inc என்கிற அமெரிக்க நிறுவனம் சுமார் 4.38 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை நீண்ட கால முதலீட்டின் மூலம் வைத்துள்ளது.
MicroStrategy நிறுவனம்
திங்கட்கிழமை இந்நிறுவனம் 15 மில்லியன் டாலர் தொகை முதலீட்டில் சுமார் 328 பிட்காயின் வாங்கியுள்ளதாக அறிவித்த நிலையில், இந்நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பிட்டியினை சராசரியாக 45,710 டாலருக்கு வாங்கியுள்ளதாக MicroStrategy Inc நிறுவனத்தின் சிஇஓ மைகேல் செய்லர் தெரிவித்துள்ளார்.
90,859 பிட்காயின்
பிஸ்னஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனமான MicroStrategy Inc பல வருடங்களாகச் செய்து வரும் கிரிப்டோ சந்தை முதலீட்டின் வாயிலாகச் சுமார் 90,859 பிட்காயினை வாங்கியுள்ளது. மொத்த 2.19 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து வாங்கியுள்ள இந்தப் பிட்காயின்களின் சராசரி விலை 24,063 டாலராக உள்ளது.
4.38 பில்லியன் டாலர் மதிப்பு
ஆனால் இன்றைய பிட்காயின் விலை மதிப்பில் MicroStrategy Inc நிறுவனம் வைத்திருக்கும் 90,859 பிட்காயின் மொத்த மதிப்பு 4.38 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த வாரம் மட்டும் இந்நிறுவனம் 19,452 பிட்காயின் 1.03 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிட்காயின் விலை
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு 50,213.03 டாலர் என்ற உச்ச விலையில் இருந்து 47,332.05 வரையில் குறைந்துள்ளது. தற்போது 10.40 மணி அளவில் ஒரு பிட்காயின் மதிப்பு 47,307.75 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications