பெய்ஜிங் : ஒரு புறம் அமெரிக்கா சீனா இடையே நடந்து வந்த வர்த்தக போருக்கு சரியான முடிவு எட்டப்படவில்லை என்றாலும், தற்போது தான் ஏனோ அமைதியாக இந்த இரு நாடுகளும் உள்ளன. எனினும் சீனா அமெரிக்காவின் தடையை மீறி, ஈரானிடன் எண்ணெய் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த இரு நாடுகளுக்கும் இடையில் புகைந்து கொண்டிருந்த நிலையில, தற்போது நம்ம அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அடுத்து என்ன செய்வாரோ? அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பாரோ என்று கூறப்படுகிறது.
ஒரு புறம் அமெரிக்கா எப்போது ஈரானின் அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியே வந்ததோ, அதிலிருந்தே இந்த இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை தான்.
இந்த இரு நாடுகளுக்கு மட்டும் தான் பிரச்சனை?
ஒரு புறம் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய டிரம்ப்,. அதோடு நிற்காமல் மேலும் சீனா இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் ஈரானிடன் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றும் கூறியது. மீறி அவ்வாறு ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் அந்த நாடுகளின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியது. இந்த நிலையிலேயே சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அடியோடு நிறுத்தின.
ஈரானுக்கு பொருளாதார பிரச்சனை?
இந்த நிலையில் பல நாடுகள் ஒரே நேரத்தில் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்ட நிலையில், ஈரானுக்கு அடுத்தடுத்த பொரூளாதார பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் ஈரான் பகிங்கிரமாக, நாங்கள் மறைமுகமாக அனைத்து நாடுகளுக்கும் சப்ளை செய்வோம் என்றும் அறிவித்தது. இந்த நிலையில் இந்த மறைமுக சப்ளை யாருக்கும் தெரியாதவாறு வைத்துக் கொள்வோம் என்றும் ஈரான் அந்த சமயத்தில் கூறி வந்தது.
சீனா மறைமுகமாக ஈரானிடம் எண்ணெய் வாங்கியதா?
இந்த பிரச்சனை இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில், சீனா உண்மையிலேயே ஈரானிடம் இருந்து மறைமுகமாக வாங்கியதா? இது பற்றி முழுமையாக தெரியாத நிலையில் இது பற்றி கூற எதுவும் இல்லை என்றும் வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனராம். இந்த நிலையில் உண்மையா? சீனா உண்மையிலேயே ஈரானிடம் எண்ணெய் வாங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தடை விதித்து இரண்டரை மாதங்கள் ஆகி விட்டது?
ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று, வெள்ளை மாளிகை தடை செய்த இரண்டறை மாதகங்களுக்கு பிறகும், கச்சா எண்ணெய் தொடர்ந்து சீனாவுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு தான் வருகிறது. இது இங்கு பிணைக்கப்பட்ட சேமிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. சீனாவின் துறைமுகங்களில் செயல்பாடுகள் தெரிந்தவர்கள் கூறியுள்ளார்களாம். இந்த எண்ணெய் வழங்கல் உள்ளூர் பழக்க வழக்கங்களை கடக்காது, இது நாட்டின் இறக்குமதி தரவுகளிலும் காண்பிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது, மேலும் இது பொருளாதார தடைகளை மீற சீனாவுக்கு அவசியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் எண்ணெய் இருப்பு விலையில் அழுத்தத்தை கொடுக்கும்?
சர்வதேச அளவில் பொருளாதாரங்களில் வளர்ச்சி குறைந்து வருவதால், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு, ஒபெக் நாடுகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினாலும், சீனா சுத்திகரிப்பாளர்கள் எண்ணெய் அதிகளவு சேமித்து வைப்பதால் உலகளாவிய எண்ணெய் விலையில், இந்த இருப்பு அழுத்தத்தை கொடுக்கும் என்றும், இதனால் பெட்ரோலிய அமைப்பு நாடுகள், இதற்கு அனுமதிக்கின்றது என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் சேமிப்பகத்தில் ஈரான் எண்ணெய் தான் உள்ளது?
ஆமாங்க.. சீனாவின் பிணைக்கப்பட்ட தொட்டிகளில் உள்ள எண்ணெய், பெரும்பகுதி தெஹ்ரானுக்கு சொந்தமானது தானாம், எனினும் சீனா பொருளாதார தடையை மீறவில்லை என்றும் சீனா மக்கள் கூறுகின்றனராம். மேலும் சீனா அதன் பழக்க வழக்கங்களை கடக்கவில்லை என்றும், இது கோட்பாடளவில் போக்குவரத்தில் தான் உள்ளது என்றும் சீனா கூறியுள்ளதாம்.
சீனா விதிமுறைகளை மீறியதா என்று தெளிவாக தெரியவில்லை?
இவ்வாறு சேமிக்கப்பட்டுள்ள எண்ணெய்களில், சில கப்பல்கள் சீனா நிறுவனங்களுக்கு சொந்தமானவையாக இருக்கலாம். அவை முதலீட்டுக்கான எண்ணெய் திட்டங்களின் ஒரு பகுதியாக அதை பெற்றிருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆசிய நாட்டின் நிறுவனங்களில் ஒன்று, ஈரானிற்கு நிதியுதவி செய்ய உதவியிருக்கலாம். இந்த வகையான பரிவர்த்தனை பொருளாதார தடைகளை மீறுகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications