உக்ரைன் போரால் பசி பட்டினியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கலாம்.. எகிப்து நிதியமைச்சர் எச்சரிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரானது அவ்விரு நாடுகளுக்கு இடையே மட்டும் அல்ல, உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ன.

குறிப்பாக பல அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிபொருள்கள், தானியங்கள், இரும்பு என பலவும் விலை அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால் சாமானியர்கள் மிகப்பெரியளவில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

ஜோ பைடன் அறிவிப்பால் ஜி ஜின்பிங் செம குஷி..! ஜோ பைடன் அறிவிப்பால் ஜி ஜின்பிங் செம குஷி..!

மக்கள் இறக்க நேரிடும்

மக்கள் இறக்க நேரிடும்

இதற்கிடையில் உக்ரைன் போருக்கு மத்தியில் உணவு விலை விலையால் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிடலாம் என எகிப்தின் நிதியமைச்சர் எச்சரித்துள்ளார். உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எகிப்திய அமைச்சரின் இந்த கருத்தானது வந்துள்ளது.

பஞ்சம் ஏற்படலாம்

பஞ்சம் ஏற்படலாம்

முன்னதாக உக்ரைன், உக்ரைனில் கோதுமை அதிகம் விளையும் ஒடேசா நகரை ரஷ்யா ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் நெருங்கி வரும் நிலையில், அந்த நகரத்தினை மீட்க வேண்டும். அப்படி மீட்காவிடில் உக்ரைனில் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்திருந்தது. முன்னதாக ஒடேசா நகரிலுள்ள 400 டன் கால் நடை தீவன கிடங்கினை ரஷ்யா அழித்தது. இந்த நிலையில் தான் எகிப்தின் அறிக்கையும் வந்துள்ளது.

யார் காரணம்?

யார் காரணம்?

எகிப்தின் இந்த எச்சரிக்கைக்கு மத்தியில், இந்த ஆண்டின் இறுதி வரையில் இருப்பு உள்ளதாகவும், எனினும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பின்மையால் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கலாம், அதனை கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். அதற்கு அவர்கள் காரணமல்ல. ஏனெனில் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என எகிப்தின் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

போரால் மோசமான நிலை

போரால் மோசமான நிலை

உக்ரைன் மோதல் பல்லாயிரக்கணக்கான மக்களை பஞ்சத்தில் ஆழ்த்தலாம் என ஐ நா எச்சரித்த சில நாட்களுக்கு பிறகு, எகிப்தின் இந்த கருத்து வந்துள்ளது. ஏற்கனவே கொரோனா, கால நிலை பருவ மாற்றம் மற்றும், பெருந்தொற்று என பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனைக்கு மத்தியில், உக்ரைன் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் போர் இன்னும் அவற்றை மோசமாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Millions of people worldwide are at risk of dying from rising food prices: Egypt Finance minister

Millions of people worldwide are at risk of dying from rising food prices in the wake of the Ukraine war
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X