பொங்கல் புளியோதரையில், சம்பளத்தைக் கழிக்கும் மாடலிங் துறை, லண்டன் மாடல் க்ளாரா பேச்சு..!

"எங்களைப் பார்க்கும் பெண்களே பொறாமை கொள்வார்கள். எங்கள் உடலைப் பார்க்கும் ஆண்கள், அழகில் கெரெங்கிப் கரைவார்கள். பணத்தின் எல்லை தான் எங்கள் ஆடைகளின் பட்ஜெட். எங்கள் உடுப்புக்கள், உங்கள் இருப்பைக் கேள்விக் குறிக்கு உள்ளாக்கும். எங்கள் அழகு சாதனப் பொருட்கள், உங்கள் பணத்தை பதம் பார்க்கும். நீங்கள் வாழ நினைக்கும் கனவு வாழ்கையை வாழும் தேவதைகள் நாங்கள்" இது தான் மாடல்கள் பற்றிய உங்கள் கருத்து என்றால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எங்கள் மனதைப் பார்க்கவில்லை, எங்கள் உடலைப் பார்த்திருக்கிறீர்கள் என கண்ணத்தில் அறைகிறார் க்ளாரா.

க்ளாரா

க்ளாரா

இவர் பெயர் மற்றும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு இவர் சொல்லும் காரணம் "இந்த துறையில ஜொலிக்க உடல் அழகு, மனவலிமை மட்டும் போதாது, என்ன தொல்லைங்க தந்தாலும் சகிச்சிக்கிட்டு முன்னேறனும்ங்குற தீவிரமான எண்ணம் வேணூம். கேள்வி அறவே கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பவர்களை வெகு எளிதில் லேபில் ஒட்டி விடுவார்கள். பின் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது". க்ளாரா புகழ்பெற்ற வோக், உபர் ஹைப், Prada, Rick Owens, Comme des Garcons போன்ற ஃபேஷன் ஷோ மற்றும் இதழ்களில் வேலை பார்த்திருக்கிறார். இவர் ஒரு 26 வயது லண்டன் மாடல்.

பொங்கல் புளியோதரை

பொங்கல் புளியோதரை

"ராம்ப் வாக் முடிஞ்சுதா, முடிஞ்சிதுங்க, சரி இந்தா பேக், நீ போட்டிருக்குற டிரஸ் எல்லாம் தான் உனக்கு இந்த ராம்ப் வாக்குக்கு நாங்க தர்ற சம்பளம். இந்த டிரெஸ்ஸோட விலை உன் சம்பளத்த விட ரொம்ப அதிகம் பாத்துக்க" என்று சம்பளக் கணக்கை முடித்துவிடுவார்கள் ஏஜென்ட்கள்.

காசு இல்ல

காசு இல்ல

ஒருவரிடம் இப்படி வாங்கினால் சரி, எல்லாருமே இப்படிக் கொடுத்தால் என்ன செய்வது, காலில் போட்டிருக்கு பிராண்டட் காலணிகளைச் சாப்பிட முடியுமா...? தினமும் போகும் ஜிம்முக்கு கட்டணமா உடுத்தி இருக்கும் உடைகளைக் கொடுக்க முடியுமா...? பண்டமாற்று முறையில் இன்றும் மளிகைக் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களா என்ன?

சம்பளக் கணக்கு

சம்பளக் கணக்கு

ஒரு கம்பெனி எங்களுக்கு வேலை தருதுன்னா, மொதல்ல எங்கள் சம்பளத்தில் அவங்களுக்கானா கமிஷன எடுத்துக்குவாங்க. அதுக்கப்புறம், எங்களுக்கு அவங்க செய்யுற செலவு எல்லாத்தையும் சம்பளத்துல கழிச்சிருவாங்க. நாங்க, தங்கறத்துக்கு ரூம் வாடகை, சாப்பாடு செலவு, ஃபோட்டோஷூட் இல்லாம வேற எப்ப மேக்கப் போட்டாக் கூட அந்தச் செலவுகளைக் கூட எங்க சம்பளத்துல பிடிச்சிடுவாங்க.

கடன் பட்டார் நெஞ்சம் போல்

கடன் பட்டார் நெஞ்சம் போல்

ஆக அவங்களுக்கான எல்லா கமிஷன், செலவுகள கழிச்சிப் பாத்த எங்க சம்பளம்ன்னு ஒன்னுமே இருக்காது. ஒரு ஃபோட்டோ ஷூட்டுக்கு 500 டாலர் சம்பளம்ன்னா, கமிஷன் + செலவுகள்ன்னு சொல்லி 600 டாலர் கணக்கு காட்டுவாங்க. ஆக நாங்க அங்கேயே எங்க செலவுல தங்கி இருந்து இன்னொரு ஷூட் முடிச்சி அந்த 100 டாலர் கடனை மீட்கணும். எங்கள வாழ்க பூர இப்புடி கடனாளியாவே வெச்சிக்க பாக்குது இந்த மாடலிங் துறை. ஒரு துறைன்னா, அதுல வேலை பாக்குற எல்லாருமே வளரணும் இல்ல. ஆனா மாடல்கள் அழிய மாடலிங் வளருதுங்குறது தான் உண்மை. இவனுங்க எங்கள கடனாளிகளா திரியவிடுற தொல்லைய விட செக்ஸ் தொல்லைய பரவா இல்லன்னு தோணுது.

வசதிகள் அல்ல வாய்ப்புகள்

வசதிகள் அல்ல வாய்ப்புகள்

இன்னும் சில பெரிய ஃபேஷன் ஷோக்களில் எங்களுக்கு பெரிய டாக்ஸி எல்லாம் நல்ல அனுப்பி வெப்பாங்க, கடைசில பாத்தா, டாக்ஸி காச கூட எங்க சம்பளத்துல கழிச்சிருப்பாங்க. நியூ யார்க் ஃபேஷன் ஷோ மாதிரி ரொம்பப் பெரிய ஷோ பண்ணா தான் எங்களுக்கு கையில நாலு காசு நிக்கும். 1000 டாலர் சம்பளம் பேசி எல்லாம் போக 400 - 500 டாலர் கிடைக்கும். ஏஜென்டுக்கு பாக்கி இருந்தா, மொதல்ல அத கழிச்சுட்டு தான் பாக்கி சம்பளம் எல்லாம். இப்புடி எங்களுக்கு வசதி தர்ற மாதிரி தந்துட்டு, காச உருவிடுவாங்க.

பாதிக்கப்படும் பிரேசில்

பாதிக்கப்படும் பிரேசில்

பாரிஸ் தான் ஃபேஷன் ஷோக்களின் உலகம். பாரீஸ்ல இருக்குற எல்லா மாடலிங் ஏஜென்ட்களோட அக்ரிமென்ட்களும் பிரெஞ்சுல தான் இருக்கும். பிரான்ஸ் நாட்டுக் காரங்க தவிர, மாடலிங் ஷோல அதிகம் வேலை பாக்குற அமெரிக்கா, பிரேசில் மாதிரியான நாடுகள்ள இருந்து வர்ரறங்களுக்கு என்ன அக்ரிமென்ட்ல எழுதி இருக்காங்கன்னு கூடத் தெரியாது. அத மீறி கேட்டா, வேற ஆளுக்கு எங்க காஸ்ட்யூம் பாஸ் ஆகும். இதுல அதிகம் பாதிக்கப்படுறது பிரேசில் பொண்ணுங்க தான். அவங்களுக்கு ஆங்கிலமும் தெரியாது, பிரெஞ்சுக் தெரியாது. ரொம்ப ஏமாத்துவாங்க. கையில் காசே தரமாட்டாங்க.

எங்கள வித்து சாப்பிடுறோம்

எங்கள வித்து சாப்பிடுறோம்

இந்த துறையில் ஜெயிச்சே ஆகணும்ன்னு சொல்லி வந்தாச்சு. ஏஜென்டுங்க இல்லாம இங்க தொழில் பண்ண முடியாது. ஏஜென்டுங்க காசு தர்றது ரொம்ப கம்மியா இருக்கு. ஆக நம்ம செலவுக்கு என்ன பண்ணலாமுன்ன் யோசிச்சு சில பொண்ணுங்க, வசதியான பசங்களோட மட்டும் தான் ஊர் சுத்துவாங்க. அதுவும் அவங்க கேக்குறத எல்லாம் வாங்கி தர்ற பணக்கார பசங்களோட சுத்துவாங்க. அவனுங்க சும்மா இருப்பாங்களா என்ன. அங்க இங்க கைபோடுவாங்க. அதை எல்லாம் சகிச்சிக்கிட்டு தான் வேலை பாக்கணும். எல்ல மீறுவாங்க

அமைப்பு சார் குரல்கள்

அமைப்பு சார் குரல்கள்

சமீபத்துல ஜேம்ஸ் ஸ்கல்லிங்குறவர் தான் மாடலிங் பிரச்னைகள முழுசா வெளி உலகுக்கு சொல்ல ஆரம்பிச்சார். அவர் சொன்னதுக்கு அப்புறம் தான் ஓரளவுக்கு எங்களுக்கான தேவ என்ன..ன்னு கம்பெனிங்க பாக்க ஆரம்பிச்சிருக்கு. 16 வயதுக்கு உட்பட்ட சின்ன பொண்ணுங்கள மாடலிங் துறையில வேலைக்கு வெக்கக் கூடாதுன்னு பிரான்ஸோட ரெண்டு பெரிய பிராண்டு முடிவு பண்ணி இருக்கு. இப்புடி எங்க துறை இப்ப தான் கொஞ்சம் திருந்த ஆரம்பிச்சிருக்கு. எப்படியாச்சம் இனிமே வர்ர மாடலுங்க கடனாளியா, காலம் பூராவும் ஒரே கம்பெனில தேங்கி நிக்கக் கூடாதுங்குறது மட்டும் தான் என்னோடு முதல் கோரிக்கை" என்று முடிக்கிறார் க்ளாரா.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+