ஈரான் போர் மௌனம் கலைத்த மொஜ்தபா கமேனி..!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்?

அமெரிக்கா ஈரான் இடையிலான போர் தொடங்கி 8 மாதங்கள் முடிந்துள்ளன. இதனால் ஈரானுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள வளைகுடா நாடுகள் தொடங்கி பல நாடுகளை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் , டீசல் விலை உயர்வு, எல்பிஜி தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு என பல சவால்களை இந்தியாவும் எதிர்கொண்டுள்ளது.

ஈரான் போர் முடிவே இல்லாமல் தொடரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானில் நீண்ட காலமாக 'யுத்தமும் இல்லை, சமாதானமும் இல்லை' என்ற நிச்சயமற்ற நிலை நிலவிவருவதாக கவலை தெரிவிக்கும் அவர் உடனடியாக இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

ஈரான் போர் மௌனம் கலைத்த மொஜ்தபா கமேனி..!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்?

பிராந்திய நாடுகளுடன் நிலையான பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்பதையும் கமேனி தனது முன்னுரிமைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார். மொஜ்தபா கமேனியின் இந்த உத்தரவு மிகவும் முக்கியமான ஒரு வழிகாட்டுதல் என ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் தெரிவித்துள்ளார். நாட்டின் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், அரசின் அனைத்து திறன்களையும் பயன்படுத்தி, உச்ச தலைவரின் இந்த உத்தரவை தீவிரமாக நிறைவேற்ற அரசு பாடுபடும் என உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read

எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அதிபர் பெசஷ்கியன் அப்போது கூறியுள்ளார். எந்தவிதமான அச்சுறுத்தல்கள், பொருளாதார தடைகள் மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் வகையில் ஈரான் அரசு தயாராக இருக்க வேண்டும். ஈரான் தேசத்தின் மன உறுதியை எங்களால் பலவீனப்படுத்த முடியும் என்றும், நாட்டை சரணடைய செய்ய முடியும் என்றும் எதிரிகள் ஒருபோதும் நினைக்க கூடாது என அதிபர் பெசஷ்கியன் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.

Recommended For You

முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பாக கத்தார் மற்றும் ஓமன் போன்ற மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்பட வேண்டும், ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் எண்ணெய் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் , ஹார்முஸ் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இதில் அடங்கும்.

இதற்கிடையே நவம்பர் 3-ஆம் தேதி வரவிருக்கும் அமெரிக்க இடைக்கால தேர்தலை தொடர்ந்து ஈரான் மீது பயங்கர தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்தியகிழக்கில் போர் பதற்றம் சற்றும் குறையாமல் அப்படியே நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+