பாகிஸ்தான் பொருளாதாரம் என்பது நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இனி எந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள போகிறதோ? தெரியவில்லை.
இந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மதிப்பீட்டு சேவை நிறுவனமான மூடீஸ் நிறுவனம், பாகிஸ்தானின் 5 வங்கிகள் மீதான தரக்குறியீட்டினை குறைத்துள்ளது.
இது நீண்டகால டெர்ம் டெபாசிட்களுக்கான ரேட்டிங் என்பதை 5 வங்கிகள் Caa3 என குறைத்துள்ளது. இது முன்னதாக Caa1 என்றும் இருந்தது.
என்னென்ன வங்கிகள்?
மூடீஸ் சேவை நிறுவனத்தின் இந்த லிஸ்டில் அலைட் பேங்க் லிமிடெட் (Allied bank limited), ஹபீப் பேங்க் லிமிடெட் (Habib bank Ltd), எம்சிபி பேங்க் லிமிடெட் (MCB bank limited), நேஷனல் பேங்க் ஆப் பாகிஸ்தான் ( National bank of pakistan), யுனைடெட் பேங்க் லிமிடெட் (united bank ltd ) உள்ளிட்ட வங்கிகள் அடங்கும்.
பாகிஸ்தானுக்கு பாதிப்பு
மூடீஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை மத்தியில் பாகிஸ்தானின் இவ்வங்கிகளின் சேவையானது பாதிக்கப்படலாம். குறிப்பாக பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பணவீக்கத்தால் தாக்கம்
தொடர்ந்து பாகிஸ்தானில் நிலவி வரும் பணவீக்க பிரச்சனைக்கு மத்தியில், இது பாகிஸ்தான் மக்கள் மத்தியில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு 31.5% எனும் அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது கடந்த முறை 20 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது. இது மேற்கொண்டு கடன் வாங்குதலில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வாரக்கடன் அதிகரிப்பு
அதேபோல பாகிஸ்தானில் உள்ள தனி நபர்கள் தொடங்கி, நிறுவனங்கள் வரையில் மிக மோசமான பணவீக்கத்தினை எதிர்கொண்டு வரும் நிலையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் வங்கிகளின் வாரக்கடன் விகிதம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் தாக்கம் இருக்கலாம்
கடன் வாங்கியோர் ஏற்கனவே வாங்கிய கடனை திரும்ப அடைக்க புதிய கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வங்கிகள் மட்டும் அல்ல, நிதி நிறுவனங்களிலும் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக வாராக்கடன், மோசமான கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இது வங்கிகளின் வருவாயினை பாதிக்கலாம். வங்கிகளின் வாராக்கடன் விகிதத்தினை அதிகரிக்கலாம்.
டெபாசிட்கள் குறையலாம்
பாகிஸ்தான் வங்கிகளிடம் 85% கடனாக பெற்றுள்ள அரசாங்கம், மிகப்பெரிய கடன் வாங்குபவராக இருந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த 5 வங்கிகள் மீதான தரக்குறைப்பு என்பது மேற்கொண்டு டெபாசிட் விகிதங்களை குறைக்கலாம். இது மேற்கொண்டு வங்கிகளின் செயல்பாட்டினை குறைக்கலாம்.
வங்கிகளுக்கு அழுத்தம்
இதற்கிடையில் இவ்வங்கிகளின் அவுலுக்கினையும் விரைவில் நெகட்டிவ் ஆக மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிக வட்டிகளினால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள், கூடுதலாக அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications