2025 ஆம் ஆண்டு டெக் நிறுவன ஊழியர்களுக்கு எல்லாம் மோசமான ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது. உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய ஊழியர்கள் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்த வண்ணம் இருக்கின்றன. நாள்தோறும் ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் இருந்து ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியான வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரையிலான இந்த நான்கரை மாத காலத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழந்திருக்கின்றன. ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்புகளை layoff.fyi என்ற இணையதளம் தொகுத்து வழங்கி வருகிறது. இந்த இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 61,220 டெக் ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர்.

சுமார் 103 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்களும் இதில் அடங்கும் . அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் அமெரிக்காவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் தற்போது இருந்தே தங்களுடைய செலவுகளை குறைக்க தொடங்கிவிட்டன.
சிக்கன நடவடிக்கை என்றவுடன் பெரும்பாலும் நிறுவனங்கள் எடுக்கக்கூடிய முதல் நடவடிக்கை ஊழியர்கள் பணி நீக்கம் என்பதுதான். அந்த வகையில் தான் கூகுள் , மைக்ரோசாப்ட், மெடா போன்ற பெரு நிறுவனங்களில் எல்லாம் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவது வாடிக்கையாக மாறி இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்திருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் கோடிங் உள்ளிட்ட வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைத்து விட்டன. கூகுள் நிறுவனம் டிவைசஸ், பிக்சல் போன்கள், ஆண்ட்ராய்டு, க்ரோம் பிரவுசர் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்திருக்கிறது.
அமேசானை பொருத்தவரை டிவைசஸ் மற்றும் சர்வீசஸ் பிரிவுகளில் வேலை செய்து வந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருக்கிறது . இண்டெல் , மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் கூட அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. இந்த ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் பெரும்பாலும் தொடக்க நிலையில் இருக்கும் ஊழியர்களே பாதிக்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் 6000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. வால்மார்ட் நிறுவனம் 1500 ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறிய அளவிலான ஸ்டார்ட் அப்கள் வரை ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கை என்பது தொடர்கதையாக மாறி வருகிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications