இன்று உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவானாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், உலகளவில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பினை எட்டிய மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் இன்றைய இந்திய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்.
15 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது 5,800% மேலாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அந்தளவுக்கு மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று அமர்வில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலையானது 182.86 டாலர்கள் என்ற லெவலை தொட்டது. இந்த நிலையில் தான் இதன் சந்தை மதிப்பானது 3 டிரில்லியன் டாலரினை எட்டியுள்ளது.
மூன்று மடங்கு வளர்ச்சி
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது பெருந்தொற்று காலக்கட்டத்தில் கூட இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியினை எட்டியது. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துதலாகவும் இருந்தது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனம் இந்த மாபெரும் உச்சத்தினை எட்டியுள்ளது.
16 மாதங்களில் பெரும் வளர்ச்சி
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2018ல் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான டெக் நிறுவனமாக இருந்தது. இது ஆகஸ்ட் 2020ல் 2 டிரில்லியன் டாலர் மதிப்பினை எட்டியது.
முதல் ஒரு டிரில்லியன் டாலரை எட்ட ஆப்பிள் நிறுவனம் 38 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. ஆனால் 2 டிரில்லியன் டாலரினை எட்ட 24 மாதங்களே ஆனது. அதனை விட மூன்றாவது டிரில்லியனை எட்ட வெறும் 16 மாதங்களே ஆகியுள்ளது.
பணக்கார நிறுவனம்
இதற்கிடையில் தான், தற்போதைய நிலவரப்படி உலகிலேயே பணக்கார நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இது இந்தியாவின் அனைத்து ஐடி நிறுவனங்களின் ரொக்க கையிருப்புகளை விட அதிகமாகவே கொண்டுள்ளது. அந்தளவு ரொக்க இருப்பினை ஆப்பிள் நிறுவனம் வைத்துள்ளது.
186 நாடுகளின் ஜிடிபிக்கு மேல்
மேலும் ஆப்பிளின் சந்தை மதிப்பு 186 நாடுகளின் ஜிடிபியினை விட அதிகமாக உள்ளது. இதில் அமெரிக்கா , சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மட்டுமே முன்னிலையில் உள்ளன. இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதம் 2.62 டிரில்லியன் டாலராகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications