ஊழியர்களை அசரடிக்கும் பிரம்மாண்டமான நவீன அலுவலகங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத தோங்களில் வடிவங்களில் எல்லாம் வானுயர்ந்த கட்டிடங்களும், பிரம்மாண்ட அரங்கங்களும், கண்களுக்கும் காட்சிக்கும் விருந்தாய் விளங்கும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அலுவலகக் கட்டிடங்களைப் பற்றிய தகவல்கள் இதோ :

இத்தாலியில் மிலன் நகரில் கம்வெர்ட்

இத்தாலியில் மிலன் நகரில் கம்வெர்ட்

இத்தாலிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் கம்வெர்ட், கைவிடப்பட்ட மிகப்பெரிய திரைஅரங்கு வளாகத்தைக் கைப்பற்றி வடிவமைப்பு அலுவலகங்கள், பண்டக அறை, சிறப்பங்காடி ஆகியவற்றை அமைத்துள்ளது.
6,6௦௦ கனமீட்டர் பரப்பளவுள்ள பால்கனி பகுதியை வீணாக்காமல் அந்தரத்தில் ஸ்கேட்டிங் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் பெலோ அல்டோ நகரின் ஏஓஎல்

கலிபோர்னியாவில் பெலோ அல்டோ நகரின் ஏஓஎல்

O+A ஸ்டுடியோவின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்ப ராட்சதன் AOL 1980 களின் தங்கள் அலுவலகத்தை வெள்ளை கான்வாஸ் உத்தரங்களைக் கொண்டும், கோடிட்ட சுவர்களையும் கொண்டு கலைநயத்துடன் விளங்குகிறது.

"டவுன் ஹால்" பகுதி சமுதாயச் சமையலறை, பெஞ்ச் இருக்கைகள், டேபிள் டென்னிஸ் ஆடுதளம் மற்றும் கண்ணைக் கவரும் மரச் சாமான்கள் ஆகியவை பணியாளர்களின் தகவல் தொடர்புக்கு உதவுகின்றன.

 

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் ராப் டய்ர்டெக் மீமிசைக் கற்பனைத் தொழிற்சாலை

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் ராப் டய்ர்டெக் மீமிசைக் கற்பனைத் தொழிற்சாலை

ராப் டய்ர்டெக் ன் எம் டிவி யின் ரியாலிட்டி ஷோ செட் ஸ்கேட்டிங் போர்ட் க்கும் சேர்த்து பயன்படுவதைப் போல் கற்பனைத் தொழிற்சாலை ராப் டய்ர்டெக் மற்றும் அவரது சகோதரரின் பல்வேறு தொழில்களுக்கும் அலுவகமாகச் செயல்படுகிறது.
பிற வசதிகளான முழு அளவிலான ஸ்கேட்டிங் பூங்கா முழுமையும் நுரைக்குழிகளுடன், ஒரு கூடைப்பந்து வளாகம், ஒரு டென்னிஸ் பந்து பீரங்கி ஆகியவைகளுடன் உள்ளது.

செல்கேஸ் கேன்கோ, ஸ்பெயின்

செல்கேஸ் கேன்கோ, ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரின் செல்கஸ் கானோ கட்டிடக்கலை சுய வடிவமைப்புடன் கூடிய செல்கஸ் கானோ பணி சூழ்நிலை பணியாளர்களை இயற்கை சூழ்நிலையுடன் தொடர்பு படுத்தி நீண்ட வடிவமைப்பு முழுதும் 2 செமீ தடிமனான வளைந்த ஜன்னல்கலை அமைத்து வெளிச்சமும், காற்றோட்டமும் அதிக அளவில் உள்ளே வரும்படி அமைந்துள்ளது.

கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கோரஸ் க்வே

கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கோரஸ் க்வே

5,௦௦,௦௦௦ லட்சம் சதுர அடி பரப்பளவில் பல்வேறு கலைநயமிக்கப் படைப்புகளுடன் கூடிய அலுவலகமாக உருவாகி வருகிறது.
அந்நிறுவனத்தின் 1,1௦௦ பணியாளர்களிடமிருந்து உற்பத்தித் திறனை மேம்படுத்த 5 மாடி முற்றம், 3 மாடி சாய்வுதளம், மிகப்பெரிய ஒய்வு அறை, ஒரு செங்குத்தான தோட்டம் மற்றும் பல்வேறு தொலைகாட்சி படப்பிடிப்புத் தளங்கள் என நவீன வசதிகளைக் கொண்டிருக்கிறது.

தாய்லாந்த் நாட்டில், பாங்காக் நகரின் DTAC நிறுவனத்தின் தலைமை அலுவலகம்

தாய்லாந்த் நாட்டில், பாங்காக் நகரின் DTAC நிறுவனத்தின் தலைமை அலுவலகம்

62,௦௦௦ சதுர அடி மற்றும் 2௦ மாடிகளைக் கொண்ட தொலைதொடர்பு நிறுவனம் DTAC ஆஸ்திரேலியாவின் ஹஸ்ஸல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. விளையாட்டின் வழியே கற்றல் என்கின்ற பண்பான்மை வட்ட வடிவிலான நூலகம், திறந்தவெளி திரையரங்கம், உள்ளரங்க ஓடுதளம், டேபிள் டென்னிஸ் மேசைகள், உள்ளரங்க கால்பந்து ஆடுதளம், ஒன்றோடொன்று இசைந்த செயல்திறன் வெளிகள், பாங்காக்கின் வானலைகளோடு போட்டியிடும் பாறை போன்ற அமைப்புடன் கூடிய கூரை ஆகிய நவீனங்களுடன் நம்மை நம் கண்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Most innovative offices across the world

Most innovative offices across the world
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X