என்னதான் இணையம் மூலம் உலக நாடுகளை நெங்கி இணைந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே உலகம் முழுவதும் பிரபலம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பெரிய செலிப்ரிட்டியாக இருக்கலாம், ஆனால் பக்கத்து மாநிலத்தை அவரை யார் என்று கூட தெரியாது. இதுவே ஒரு நாட்டுக்கும் மற்ற நாடுகளையும் ஒப்பிட்டால் வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பிரபலம் கிடைக்கும்.
இப்படிப்பட்டவர் தான் யூடியூப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட், ஜிம்மி டொனால்ட்சன். ஜிம்மி அமெரிக்கா, மெக்சிகோ, இந்தியா, போன்ற நாடுகளில் பிரபலமாக இருப்பது தெரியும், ஆனால் சீனாவில் இவருக்கும் இத்தகைய மவுசு இருப்பது இப்போது தான் சீன மக்களுக்கே தெரிய வந்துள்ளது.

சீனாவின் பிரபல வீடியோ தளமான Kuaishou தளத்தில் யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி டொனால்ட்சன் முதல் முறையாக லைவ் வீடியோவை வருகிற ஜூலை 26, 2025 அன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, சீன சமுக வலைத்தளத்திலும், இன்ஃப்ளூயன்சர் சந்தையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒரு அறிவிப்பால் குவைஷோ டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஹாங் செங் குறியீட்டில் 7%க்கும் மேல் உயர்ந்து முடிவடைந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் பல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் சீனாவில் தனது தடத்தை பதித்து வருகின்றனர்.
ஜிம்மி டொனால்ட்சன் தனது முதன்மையான மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனலில் 415 மில்லியன் க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார். இவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் சராசரியாக 100 மில்லியன் பார்வைகளை கடந்து வருகின்றன. சொல்லப்போனல் யூடியூப் சிஇஓ-வை விடவும் அதிகமாக ஜிம்மி டொனால்ட்சன் சம்பாதிக்கிறார் என்றால் மிகையில்லை.
ஜிம்மி டொனால்ட்சன் குவைஷோ-வில் தனது லைவ் வீடியோவை தொடங்குவது, சீன சந்தையில் புதிய சகாப்தத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த லைவ் வீடியோ சீன கலாச்சார அம்சங்களுடன் AI மொழி மாற்றுதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீன மற்றும் ஆங்கில பார்வையாளர்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக குவைஷோ டெக்னாலஜியின் பங்கு மதிப்பு, இன்றைய வர்த்தகத்தில் 7.08% உயர்ந்து 77.90 ஹாங்காங் டாலர் அளவில் முடிவடைந்துள்ளது, இது நேற்றைய வர்த்தகத்தில் 72.75 ஹாங்காங் டாலர் என்ற விலையிலிருந்து உயர்ந்துள்ளது.
இந்த பங்கு இன்று அதிகப்படியாக 78.85 ஹாங்காங் டாலர் வரையில் உயர்ந்து தனது 52 வார உயர்வை எட்டியது. இது மார்க்கெட்வாட்ச் தகவலின் படி 37.55 ஹாங்காங் டாலர் என்ற குறைந்த மதிப்பிலிருந்து சிறப்பான உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குவைஷோ டெக்னாலஜியின் பங்குகள் 74% இழப்பை சந்தித்தாலும், கடந்த ஒரு ஆண்டில் 74.86% லாபம் பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரை (YTD) அடிப்படையில், இந்த பங்குகள் 92.11% உயர்ந்துள்ளன.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications