சென்னை: ரஷ்யா உக்ரைன் போர் பிரச்சனை இன்னும் முடியாத நிலையில், உக்ரைன் நாட்டை உலக நாடுகள் தனித்துவிட்டுள்ள வேளையில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன்-க்குள் நுழையும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. இந்த நிலையில் இரு நாடுகள் மத்தியிலான போருக்குப் பின்பு ரஷ்யா - இந்தியா மத்தியிலான நட்பு பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது.
இதன் வாயிலாகக் கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் 3 அரசு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் பேச்சுவார்த்தையைத் துவங்கியது. இதில் முகேஷ் அம்பானி ரஷ்யா உடன் பெரும் ஒப்பந்தத்தை வென்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் உடன் ஒரு வருட ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக, மாதம் குறைந்தது 3 மில்லியன் பேரல் அதாவது 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ரூபிள் நாணயத்தில் வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், உக்ரைன் மீதான போருக்குப் பின்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடைகளுக்கு மத்தியில், ரஷ்யா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்தியாவுடன் கைகோர்த்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டு உள்ள நிதி தடைக்கு மாற்று வழிகளைக் கண்டறியும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்நாட்டு நாணய பரிமாற்றத்தைக் கொண்டு வந்தார்.
இது பெரிய அளவில் வெற்றி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையில் டாலர் ஆதிக்கம் குறையும் போக்கு உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில் தான் ரஷ்யாவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-க்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தில் பணத்தைச் செலுத்துகிறது.
ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம், தனியார்த் துறை நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எண்ணெய் இறக்குமதியைக் குறைந்த விலையில் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. OPEC+ எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு, ஜூன் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ள வேளையில் இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக அமையும்.
OPEC அமைப்பில் இருக்கும் அரபு நாடுகளையும், ரஷ்யா போன்ற கூட்டு நாடுகளையும் உள்ளடக்கிய OPEC+ அமைப்பு, ஜூன் 2 ஆம் தேதி ஆன்லைன் கூட்டத்தில் எண்ணெய் உற்பத்திக் குறைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோரான இந்தியா, 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கும் தடைகளுக்கு மத்தியில் கடல் வழியாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாக மாறியுள்ளது.
இப்படி இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு, இந்தியா ரூபாய், திர்ஹம் மற்றும் சீன யுவான் ஆகிய நாணயங்களிலும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications