2 லட்டு எடுத்து கொண்டாடும் முகேஷ் அம்பானி..! ஒரே கல்லில் இரண்டு மாம்பழமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமக்கு எல்லாம் போட்ட காசு வரவில்லை என்றால் தான் நஷ்டம் என்போம். ஆனால் பணக்காரர்களுக்கு போட்ட காசு பல மடங்காக திரும்ப வரவில்லை என்றாலே நஷ்டம் என்பார்கள்.

அதாவது லாபத்தில் நஷ்டம் பார்ப்பது பணக்காரர்கள் வழக்கம். "100 கோடி லாபம் வரும்னு எதிர்பார்த்தேன். 84 கோடி தான் லாபமா..? சரி விடுங்க 16 கோடி லாபத்தில் நஷ்டம்" என்பார்கள்.

இப்படி கணக்குப் பார்த்தே இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டு சாதனைகளைச் செய்து, இரண்டு லட்டு எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்

பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு விலை இருப்பதைப் போல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அதாவது இன்றைய விலைக்கு அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.

9.5 லட்சம் கோடி

9.5 லட்சம் கோடி

இன்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை இன்று 1570 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் அதிகம். ஆக, 633 கோடி பங்குகள் * 1570 = 9.91 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது. இது இந்திய வரலாற்றிலேயே புதிய உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயரத்தை இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிபி பிஎல்சி

பிபி பிஎல்சி

இந்த இந்திய சாதனை ஒரு சர்வதேச நிறுவனத்தையும் சாய்த்து இருக்கிறது. BP Plc என்கிற பிரிட்டீஷ் எண்ணெய் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட, இப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் அதிகமாக இருக்கிறதாம். BP Plc நிறுவனத்தின் சந்தை மதிப்பு 132 பில்லியன் டாலராக இருக்கிறது. ஆனால் ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 133 பில்லியனைக் கடந்து இன்றும் ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறது.

ஆறாவது பெரிய கம்பெனி

ஆறாவது பெரிய கம்பெனி

உலகிலேயே சுமார் 318 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் அமெரிக்காவின் எக்ஸான் மொபில் நிறுவனம், முதலிடத்தில் இருக்கிறது. அப்படி கணக்கு போட்டுப் பார்த்தால், ரிலையன்ஸ் நிறுவனம், இப்போது உலகிலேயே ஏழாவது இடத்தில் இருந்து, ஆறாவது பெரிய எண்ணெய் நிறுவனம் என்கிற பெயரை, BP plc நிறுவனத்திடம் இருந்து தட்டிப் பறித்து இருக்கிறது. இது தான் முதல் லட்டுக்கு காரணம்.

ஆசியாவில் நம்பர் 1

ஆசியாவில் நம்பர் 1

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 165 பில்லியன் டாலரைக் கடந்து விட்டால், ஆசியாவின் நம்பர் 1 எண்ணெய் நிறுவனம் என்கிற பெயரையும் தட்டி விடலாம். இதெல்லாம் நம் முகேஷ் அம்பானி கணக்கு போடாமலா இருப்பார், கூடிய விரைவில் அந்த நல்ல விஷயத்தையும் செய்துவிடுவார். நாங்களும் விரிவாகச் சொல்கிறோம்.

60 பில்லியன் டாலர்

60 பில்லியன் டாலர்

கடந்த மார்ச் 2019-ல் ஃபோர்ப்ஸ் நிறுவன கணிப்பின் படி, முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். ஆனால் இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்வு போன்ற சில காரணங்களால், இப்போது நம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்து இருக்கிறது தெரியுமா..? 60 பில்லியன் டாலர் (59.8 பில்லியன் டாலர்).

8 மாதம் 9.8 பில்லியன் டாலர்

8 மாதம் 9.8 பில்லியன் டாலர்

ஆக வெறும் 8 மாதத்தில் 9.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து இவர் சொத்து சுமார் 60 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. 60 பில்லியன் டாலர் என்றால் நம் ஊர் பணத்தில் 4.2 லட்சம் கோடி ரூபாய் (4,20,000 கோடி ரூபாய்). இதனால் தான் இரண்டாவது லட்டு எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். அடுத்த டார்கெட் என்ன..? 70 பில்லியன் டாலரா அம்பானிஜி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani wealth surge $9.8 bn in 8 months reliance world 6th biggest oil company

The asias richest billionaire reliance became the 6th biggest oil company in terms of market capitalization. From March 2019 to till date Mukesh ambani wealth surged around 10 billion dollars.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X