டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அப்படி அவருடைய தலைமையின் கீழ் எலான் மஸ்கிற்கு செயல்திறன் துறை என்ற புதிய துறையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நியமனம் பலருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், டெஸ்லா விற்பனை நிலையங்களுக்கு வெளியிலும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. இந்த போராட்டம் ஏன் நடந்தது? அதன் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் எலான் மஸ்க் அரசாங்க செயல் திறன் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியது. இந்த துறையின் தலைவராக இருப்பதால் அரசாங்கத்தின் முக்கியமான தரவுகளை மஸ்க் எளிதாக அணுகலாம். அரசாங்கத்தின் செலவுகள் என்ன? என்பதை கண்காணித்து அதை குறைக்கலாம். அதே சமயம் அரசாங்க நிறுவனங்களை மூடும் அதிகாரமும் மஸ்கிற்கு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக மஸ்க் அரசாங்க தரவுகளை எல்லாம் பெற்று அவருடைய தனிப்பட்ட வணிக நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார் என்ற காரணத்தினால் இந்த போராட்டம் எழுந்தது. சிலர் அரசாங்க தரவுகளை மஸ்க் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாகக் கருதினர்.
மஸ்கின் இந்த அரசாங்க பதவி டெஸ்லா நிறுவனத்தின் விற்பனையை பாதிக்கும் என்றும் போராட்டக்காரர்கள் நம்பினர். அதோடு சமீபகாலமாக டெஸ்லா நிறுவனம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் பங்குகள் வீழ்ச்சியடையும், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு குறையும்.
அரசாங்க பதவியும் நிறுவனத்தின் சிஇஓ பதவியும் ஒரே நபர் வகிப்பது பிற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியும் ஒரு காரணமாக அமைந்தது. சிலர் இதனால் டெஸ்லா கார்களை சேதப்படுத்திய சம்பவங்களும் நிகழ்ந்தன.
மஸ்கிற்க்கு இந்தப் பதவி வழங்கப்பட்ட போது.. அவ்வப்போது சிறு சிறு போராட்டங்கள் வெடித்தன. ஆனால் சனிக்கிழமை அன்று நடந்த போராட்டம் தான் மிகப்பெரிய போராட்டமாக அமைந்தது. டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை ஏற்கனவே சரிவை சந்திக்கிறது என்பதை பார்த்தோம். அதை மேலும் மோசமாக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள அனைத்து 277 டெஸ்லா ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களிலும் ஒரே நாளில் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். பிற்பகல் வரை நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ், கனெக்டிகட், நியூயார்க், மேரிலாந்து, மினசோட்டா மற்றும் டெக்சாஸ் போன்ற பகுதிகளில் உள்ள டெஸ்லா விற்பனை நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் திரண்டனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக பல போஸ்டர்கள் சமூக ஊடகத்தளங்களில் பரவத் தொடங்கியது. எலான் மஸ்க்-ஐ வெறுத்தால் ஒலி எழுப்புங்கள்! பில்லியனர் சகோதரத்துவத்தை எதிர்த்து போராடுங்கள்! என்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாஷிங்டன், சிகாகோ, இண்டியானாபோலிஸ், சின்சினாட்டி மற்றும் சியாட்டில் போன்ற முக்கிய நகரங்களிலும், வர்ஜீனியா, பென்சில்வேனியா மற்றும் கொலராடோவில் உள்ள நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. ஏய், ஹே, ஹோ, ஹோ, எலான் மஸ்க் வெளியேற வேண்டும்! என்று கலிபோர்னியாவின் டப்ளினில் உள்ள ஒரு ஷோரூமுக்கு வெளியே பலர் கோஷமிட்டனர்.
டெஸ்லா டேக் டவுன் என்பதன் கீழ் ஏமாற்றம் அடைந்த டெஸ்லா உரிமையாளர்கள் காணப்பட்டனர். இவர்கள் உலகம் முழுவதும் 230-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தினர். ஐரோப்பாவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மஸ்க்குக்கு எதிரான உணர்வு சற்று வலுவாக இருந்தது. லண்டனில் சுமார் 20 பேர் மஸ்க்-கை எதிர்த்து கையில் சில வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சில போராட்டக்காரர்கள் அமைதி போராட்டத்தை தாண்டி டெஸ்லா வாகனங்களை எரிப்பது மற்றும் சேதப்படுத்துவது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications