நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் பற்றி எரிந்து வருகிறது. நேபாள நாட்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான இளைஞர்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் போராட்டம், வன்முறை, தீ, துப்பாக்கிச்சூடு என போர்க்களமாக காட்சி தருகிறது.
நேபாளத்தில் போராட்டம்: நேபாள நாட்டு அரசு யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு திடீரென தடை விதித்தது. இது அந்த நாட்டு இளைஞர்கள் குறிப்பாக GEN Z தலைமுறையினர் இடையே மிகப்பெரிய அளவிலான ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காத்மண்டு உள்பட நாட்டின் பிரதான பகுதிகள் எங்கும் பெருமளவிலான போராட்டங்களை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.

வன்முறை: பல இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாகவும் மாறி இருக்கிறது. ஊழல் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றால் கொதிப்படைந்து இருந்த ஜென் ஸீ இளைஞர்களுக்கு அரசின் இந்த சமூக ஊடக தளங்களுக்கான தடை என்ற அறிவிப்பு மேலும் கொதிப்படையச் செய்து மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த வைத்து இருக்கிறது.
20 பேர் உயிரிழப்பு: தலைநகர் காத்மண்டுவில் அரசின் தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுமார் 20 பேர் வரை கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து இருக்கின்றனர் . நேபாள நாட்டு அரசாங்கம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்டவற்றை நடத்தி இருக்கிறது. இருந்தாலும் இளைஞர்கள் இதற்கு அஞ்சாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் அவசர ஆலோசனை: இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்ததை எடுத்து நேபாள பிரதமர் கே பி சர்மா ஒளி, வெளிநாட்டினை சேர்ந்த அமைப்புகள் நேபாளத்தின் அமைதியை குறைப்பதற்காக இவ்வகையிலான போராட்டங்களை தூண்டி விட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தி சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவித்தார். தற்போது யூடியூப் போன்ற 26 சமூகவலைதளங்களும் நேபாளத்தில் வழக்கம் போல செயல்படுகின்றன.

மீண்டும் அனுமதி: இருந்தாலும் நேபாளத்தில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. ஏனெனில் இது சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் மட்டுமே எழுந்த போராட்டம் இல்லை. வேலைவாய்ப்பின்மை, ஊழல் உள்ளிட்டவற்றால் கொதிப்படைந்த ஜென் ஸீ இளைஞர்களின் எழுச்சி இது . நாடு முழுவதும் வேகமாக போராட்டம் பரவி வரும் நிலையில் முதலில் நேபாள நாட்டு வேளாண்மை துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.
தலைதெறிக்க ஓடிய அமைச்சர்: இளைஞர்கள் பலரும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை குறி வைத்து தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினர். அப்படி நிதி அமைச்சரின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து இளைஞர்கள் அவரை சிறை பிடித்தனர். இந்நிலையில் நிதி அமைச்சர் அவர்களிடம் இருந்து தப்பியோடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.
வாகனங்களுக்கு தீ: பிரதமர் கே பி சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர். நேபாளத்தில் வேலை வாய்ப்பின்மை பெருகிவிட்டது, ஊழல் அதிகரித்துவிட்டது இதற்கெல்லாம் ஒரு முடிவை கட்டாமல் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தால் சரியாகுமா என பல்வேறு இளைஞர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கற்களை வீசி தாக்குதல்: பல இடங்களிலும் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டனர். இந்த வன்முறை அதிகரித்த நிலையில் அடுத்தடுத்து பல்வேறு அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு வந்தனர் . இருந்தாலும் அதனை இளைஞர்கள் ஏற்கவில்லை. துணை பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் நேபாள நாட்டு மத்திய வங்கியின் ஆளுநரின் குடியிருப்புகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
பிரதமர் ராஜினாமா: பிரதமரின் குடியிருப்புக்கு உள்ளேயே நுழைந்து வாகனங்களுக்கு தீ வைத்தனர் . இந்த சூழலில் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் ஒலி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதன் மூலமாவது நேபாளத்தில் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை:இந்த சூழலில் நேபாளத்தில் இருக்கக்கூடிய இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது . இந்தியா நேபாளம் இடையிலான எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தி இருப்பதாக அரசு கூறி இருக்கிறது. இந்தியாவில் இருந்து காத்மண்டுவிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications