இன்று உலக பொருளாதாரத்துக்கு என்று ஒரு தனி பெயர் இருக்கிறது என்றால் அது கிக் எகானமி தான். கிக் எகானமி என்றால் என்ன..?
கிக் பொருளாதாரம் என்பது வழக்கமான திறந்த சந்தை கொண்ட பொருளாதாரம் தான். இந்த பொருளாதாரத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த ஊழியர்களாகவும், தற்காலிக ஊழியர்களாகவும் மட்டுமே இருப்பார்கள்.
நிறுவனங்களும், தங்களுக்கான வேலையை செய்து முடிக்க, ஒருவரை நிரந்தரமாக வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக, ஒரு ஒப்பந்த ஊழியரை அழைத்து ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள்.
கிக் ஊழியர்கள்
Freelancer, தனி ஒப்பந்ததாரர்கள், திட்டங்கள் அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள், பகுதி நேரம் வேலை பார்ப்பவர்கள் எல்லாருமே கிக் பொருளாதாரத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். இன்று உலகே இந்த கிக் பொருளாதாரத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டு இருக்கிறது.
செலவு அதிகம்
கிக் பொருளாதாரத்தின் படி, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, ஒப்பந்த ஊழியர்களை அதிகப்படுத்துவதால், நிறுவனத்துக்கு ஏகப்பட்ட செலவுகள் மிச்சமாகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியங்களில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு அத்தனை வலுவானது, அத்தனை செலவானது.
இவர்கள் தான்
ஆகவே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் பல வேலைகளை ஒப்பந்த ஊழியர்களை வைத்தே முடித்துக் கொள்கிறார்கள். சரி உபர் மேட்டருக்கு வருவோம். Cnet, Vanityfair போன்ற பத்திரிகைகள், உபர் நிறுவனத்திடம் 650 மில்லியன் டாலர் செலுத்தச் சொல்லி, நியூ ஜெர்ஸி அரசு கேட்டிருப்பதாகச் சொல்கிறது. இப்போது உபர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிரைவர்கள் ஊழியர்களா (Employees)..? அல்லது (Individual Contractors) தனி ஒப்பந்ததாரர்களா..? என்பது தான் விவாதம்.
எதிர்ப்பு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தான் முதல் முறையாக உபர் போன்ற ஆன் டிமாண்ட் டாக்ஸி சேவை வழங்கும் நிறுவன ஓட்டுநர்களை, ஊழியர்களாக கருதி, ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் தரச் சொல்கிறது. இது நாள் வரை உபர் தன் ஓட்டுநர்களை தனி ஒப்பந்ததாரர்களாகத் தான் கணக்கு காட்டுகிறார்கள். எனவே ஒரு ஊழியருக்கு செலுத்தும் Employment tax மற்றும் இன்சூரன்ஸ் போன்ற செலவுகளைச் செலுத்தவில்லை.
மாற்றச் சொல்லும் சட்டம்
கலிஃபோர்னியாவின் இந்த புதிய சட்டம், கலிஃபோர்னியாவில் வரும் ஜனவரி 01, 2020 முதல் அமலுக்கு வருகிறது. இப்போது அமெரிக்காவின் மற்ற மாகாணங்களான நியூ யார்க், ஆரிகன், வாசிங்டன் டி சி என பல மாகாணங்களும் கலிஃபோர்னியாவின் இந்த புதிய ஊழியர் சட்டத்தைக் கொண்டு வர ஆலோசித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறது சி நெட் பத்திரிக்கை.
நியூ ஜெர்ஸி
நியூ ஜெர்ஸி மாகாணத்தில், உபர் ஓட்டுநர்களை, தனிப்பட்ட ஒப்பந்ததார்களாக கருத முடியாது. அவர்களை ஊழியர்களாகத் தான் கருத வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது நியூ ஜெர்சி மாகாண தொழிலாளர் துறை. அதோடு கடந்த 2015 முதல் தனி ஒப்பந்ததாரர்களாக கணக்கு காட்டப்பட்ட ஓட்டுநர்களை, ஊழியர்களாக கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
பாக்கி தொகை
ஆக உபர் நிறுவனம், தன் ஊழியர்களுக்கு 2015-ம் ஆண்டில் இருந்து தனி ஒப்பந்ததாரர்களாக காட்டப்பட்ட, ஓட்டுநர்களை, ஊழியர்களாக கருதினால் செலுத்த வேண்டிய Employment tax மற்றும் ஊழியர்களுக்கான் இன்சூரன்ஸ் + அபராதம் மற்றும் வட்டி என எல்லாம் சேர்த்து 650 மில்லியன் டாலரைச் செலுத்தச் சொல்லிக் கேட்டு இருக்கிறது நியூ ஜெர்ஸி அரசு. இதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையும் உறுதி செய்கிறது.
உபர் தரப்பு
இந்த சட்டத்தை எதிர்த்து, உபர் போன்ற டெக்னாலஜி சார்ந்த பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்களாம். அதோடு சுமார் 90 மில்லியன் டாலர் செலவழித்து மக்கள் மத்தியில் இந்த பிரச்னை குறித்து பேசியும் வருவதாகச் சொல்கிறது சி நெட் பத்திரிக்கை. யாருக்கு சாதகமாக வரும்..! முதலாளியா... தொழிலாளியா..! பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications