இந்தியர்களை குறிவைக்கும் 'சீனா'.. ஐடி ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'..!

இந்தியர்களைக் குறிவைக்கும் சீனா.. அமெரிக்கா உடன் போட்டிப்போட 'புதிய' திட்டம்..!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா, தனது தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய இந்தியர்களை, அந்நாட்டில் இருந்து வெளியேற்ற எச்-1பி விசா கட்டுப்பாடுகள், கிரீன்கார்டு எண்ணிக்கை குறைப்பு எனப் பலதரப்பட்ட முயற்சிகளைக் கையில் எடுத்து வருகிறது அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு.

அதேபோல் டொனால்டு டிரம்ப் சீன நாட்டுடன் செய்யப்படும் வர்த்தகத்தையும், வேலைவாய்ப்புகளையும் அதிகளவில் குறைக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே பேசி வந்தார். இதுகுறித்துச் சில முக்கிய முடிவுகளையும் அதிபரான பின்னர் டிரம்ப் எடுத்தார்.

இந்நிலையில் உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிவந்த சீன பொருளாதாரம், அமெரிக்காவிற்குப் போட்டியாக உலக நாடுகள் மத்தியில் டெக்னாலஜி மற்றும் இன்னோவோஷன் துறையில் முதல் இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டு, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களைக் குறிவைத்துள்ளது சீனா.

அமெரிக்காவும்.. சீனாவும்..

அமெரிக்காவும்.. சீனாவும்..

பொருளாதாரப் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகப் போட்டி மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது டிரம்ப் தலைமையிலான அரசு சீனா உடனான வர்த்தகத்தைக் குறைக்கவும், வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களை அடியோடு நிறுத்த பல விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதன் எதிரொலியாகச் சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் போர் வெடிக்கும் எனக் கருத்து எல்லாம் சமுக வலைத்தளங்களில் பரவிவந்தது மறக்க முடியாது.

ஆனால் சீனா நிதானமாகப் புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.

 

இந்தியர்கள் வெளியேற்றம்

இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் டெக்னாலஜி மற்றும் இன்னோவோஷன் துறையின் முக்கியச் சக்தியாக இருப்பது இந்தியர்கள் என்பது உலக நாடுகளுக்குத் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பரித்துக்கொள்கின்றனர் என்பதைக் காரணம் காட்டி அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற அனைத்து விதமான பணிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது.

அறிவாளி இந்தியர்கள்

அறிவாளி இந்தியர்கள்

இந்நிலையில் சீனா நாட்டினர் தற்போது அமெரிக்காவில் வெளியேற்றப்படும் இந்தியர்கள், மற்றும் அமெரிக்கா செல்ல விரும்பு அறிவாளி (High skilled or skilled) இந்தியர்களைத் தன் நாட்டில் ஈர்க்க முடிவு செய்துள்ளது சீனா.

சீனாவின் அதிரடி திட்டம்..

சீனாவின் அதிரடி திட்டம்..

பல்வேறு பிரச்சனைகளால் சீன நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகளவில் பாதித்த நிலையில், டெக்னாலஜி மற்றும் இன்னோவோஷன் துறையில் கவனத்தைச் செலுத்தி அமெரிக்க உடன் நேரடியாகப் பொருளாதாரத்தில் போட்டிப்போட முடிவு செய்துள்ளது.

சீனா நாட்டின் இப்புதிய திட்டத்திற்கு அடித்தளம் அமைப்பவர்கள் இந்தியர்கள்.

 

குளோபல் டைம்ஸ்

குளோபல் டைம்ஸ்

இதுகுறித்து இந்நாட்டு அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் இன்னோவேஷன் திறமையை மேம்படுத்த, சீனா இந்தியர்களை அதிகளவில் பணியில் அமர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரையில் காலங்களில் சீனா அதிகளவிலான இந்தியர்களையும், இந்திய அறிவியலையும் பயன்படுத்தாதது உறுதியாகியுள்ளது.

 

புதிய இடம்

புதிய இடம்

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களுக்கு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தவர்களும் தற்போது புதிய இடம் கிடைத்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்க விசா கட்டுப்பாடுகளைக் கண்டு இனி அஞ்சத் தேவையில்லை.

 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை

தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் சரிவை முன்கூடியே உணர்ந்த சீனா, கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் அதிகளவில் முதலீடு மற்றும் கவனத்தை அளித்து வருகிறது.

செலவின குறைப்பு

செலவின குறைப்பு

தற்போது சீனாவில் இருக்கும் பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் சம்பளம் மற்றும் செலவினத்தைக் காரணம் காட்டி சீனர்களைத் தாண்டி இந்தியர்களை ஈர்க்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் புதிய கட்டுப்பிடிப்புகளுக்கும் அதிகரிக்கத் துவங்கும் எனத் திட்டமிட்டுள்ளது சீன நிறுவனங்கள்

அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் சீனாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

சிஏ டெக்னாலஜிஸ்

சிஏ டெக்னாலஜிஸ்

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான சிஏ டெக்னாலஜிஸ், சமீபத்தில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பரிவில் பணியாற்றி வந்த 300க்கும் மேற்பட்ட சீன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, தற்போது இந்தியாவில் 2,000 ஊழியர்கள் மற்றும் தொழிநுட்ப அதிகாரிகள் கொண்ட புதிய கிளையைத் துவங்கியுள்ளது என மற்றொரு சீன செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

உலக நாடுகளின் ஈர்ப்பு

உலக நாடுகளின் ஈர்ப்பு

பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பின்தங்கி இருந்தாலும், இந்தியாவில் திறமையான இளைஞர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இவர்களை அடைவதே தற்போது உலக நாடுகளின் முக்கியப் பணியாக உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி

கம்யூனிஸ்ட் கட்சி

சீனா தற்போது தனது ஆஸ்தான உற்பத்தி கொள்கையில் இருந்து புதிய டெக்னாஜி துறை சார்ந்த வளர்ச்சி பாதையில் பயணிக்க உள்ளது எனப் பெயர் வெளியிட விரும்பாத சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கூறியுள்ளார். இதன் மூலம் சீனாவின் சட்டம் உறுதியாகியுள்ளது.

சீன சுகாதாரத் துறை

சீன சுகாதாரத் துறை

சமீபத்தில் சீன நாட்டின் முக்கிய நகரான ஷாங்காய் பகுதியில் இந்நாட்டின் சுகாதாரத் துறையை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல, மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தைச் சீன அரசு அமைத்துள்ளது. இதில் பணியாற்றும், ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலானோர் ஸ்கான்டிநாவியா, கனடா மற்றும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும், இந்தியர்களும்..

இந்தியாவும், இந்தியர்களும்..

திறன்வாய்ந்த இந்தியர்கள் அனைவரும் இப்படி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இப்போது சீனா பக்கம் செல்வதால் இந்தியாவின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது.

எல்லாமே மார்ச் மாதம் தான்..

எல்லாமே மார்ச் மாதம் தான்..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+