புதிய சட்டம்: H-1B விசா, கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் 24x7 நேரமும் ID கார் வைத்திருப்புது அவசியம்..!

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பான புதிய விதிகள் தற்போது மிகுந்த விவாதத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளன. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான முந்தைய நிர்வாகத்தில் தொடங்கப்பட்ட சில கடுமையான விதிமுறைகள், தற்போது ஏப்ரல் 11, 2025 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளன. இவை அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குடியேறியவர்களை நேரடியாகப் பாதிக்கும்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்ட அறிவிப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும், அதாவது குடியேறியவர்கள் எல்லா நேரங்களிலும் தங்கள் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். இது கடுமையான விதியாகும்; அதில் எந்தவொரு தவிர்க்கும் வாய்ப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டம்: H1B விசா, கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் 24x7 நேரமும் ID கார் வைத்திருப்புது அவசியம்!

இந்த விதிமுறையின் கீழ், இந்திய H-1B விசா வைத்திருப்பவர்களும் கிரீன் கார்டு உரிமையாளர்களும், அவர்களது அடையாள அட்டைகளை 24x7 எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் அதிகாரிகளிடம் ஆவணங்களை உடனே காட்ட வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

"Protecting the Nation from Foreign Terrorist Entry into the United States" என்ற தலைப்பில் ஜனவரி 20, 2017 அன்று டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவை அடிப்படையாக கொண்டு DHS இந்த புதிய நடைமுறைகளை செயல்படுத்தியுள்ளது. அந்த உத்தரவை வழிகாட்டியாக கொண்டு, தற்போது 'படையெடுப்புக்கு எதிராக அமெரிக்க மக்களை பாதுகாத்தல்' என்ற காரணத்தின் பெயரில், சட்டபூர்வமாக இருந்தாலும், குடிமக்கள் அல்லாத அனைவரும் 'ID' ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பது புதிய கட்டாயமாகும்.

அமெரிக்காவில் 30 நாட்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் "படிவம் G-325A" என்பதனை நிரப்பி அரசு பதிவில் சேர வேண்டும். மேலும் அவர்கள் கைரேகைகள் (fingerprints) உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் 14 வயதை கடந்த குடியேறியவர்களின் குழந்தைகளும், அந்த வயது அடைந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

புதிய விதிகளின் கீழ், ஒருவர் தனது முகவரியை மாற்றும் பட்சத்தில், அதை 10 நாட்களுக்குள் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். தவறினால், $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். செல்லுபடியாகும் விசா (படிப்பு, வேலை, பயணம்), கிரீன் கார்டு, வேலைவாய்ப்பு ஆவணங்கள் (EAD) அல்லது I-94 சேர்க்கை பதிவேடுடன் நாட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு மட்டும் இந்த புதிய விதி பொருந்தும். அவர்கள் ஏற்கனவே பதிவு செய்தவர்களாகக் கருதப்படுவதால், மறுபடியும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் அடையாள ஆவணங்களை எப்போதும் வைத்திருப்பது கட்டாயம்.

அமெரிக்காவில் சுமார் 5.4 மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் ஒரு முக்கிய பகுதி - H-1Bவிசா பெற்ற தொழிலாளர்கள், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் மற்றும் மாணவர்கள். இந்தப் புதிய விதிகள், குறிப்பாக வசிப்பிடம் அல்லது வேலைவாய்ப்பை மாற்றும்போது, ​​அவர்களின் அடையாள ஆவணங்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போகும் அவசியமான ஆபத்தை உருவாக்குகின்றன.

2022 ஆம் ஆண்டு DHS தரவுகள் படி, 2.2 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். ஆனால், Pew Research Center மதிப்பீடு இந்த எண்ணிக்கையை 7 லட்சம் எனவும், Migration Policy Institute அதன் மதிப்பீடுகளை 3.75 லட்சம் எனவும் கூறுகிறது. இவர்கள் மீது இந்த புதிய விதிகள் கடுமையாக அமையும். சட்டவிரோத குடியேறிகள் அல்லது ஆவணங்கள் இல்லாதவர்கள் இப்போது அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் எதிர்காலத்தில் கைது, கட்டாய நாடுகடத்தல் மற்றும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பல இந்திய மாணவர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். அவர்கள் அடிக்கடி தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவதால், முகவரி மாற்ற அறிவிப்புகள் மற்றும் அடையாள ஆவணங்களை தடையின்றி பயன்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது. H1-B விசா வைத்திருப்பவர்கள், வேலை மாற்றும் சூழ்நிலையில், சில நேரங்களில் ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் தாமதமாகும். இவை அவர்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாதவர்களாக மாற்றும் அபாயம் உள்ளது. இவர்கள் இப்போதும் அரசு கண்காணிப்புக்கு வெளியே இருப்பதால், இந்த விதி அவர்களை அச்சம் அடைய செய்துள்ளது. ஆனால், அரசின் நோக்கம் அவர்களை பதிவு செய்து கண்காணிக்க முடியும் என்பதே ஆகும்.

அமெரிக்க குடியேற்ற சட்ட வல்லுநர்கள் தெரிவித்ததாவது, "இந்த விதிகள் 1940களிலிருந்தே சட்டங்களில் இருந்தன. ஆனால், அவை இதுவரை மிகக் குறைவாகவே அமல்படுத்தப்பட்டன. இப்போது அவற்றை முழுமையாக அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது."

இந்திய H1-B விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தற்போதைய அமெரிக்க நிலைமை புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடையாள ஆவணங்களை எப்போதும் எடுத்துச் செல்லும் கட்டாயம் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேசமயம், சட்டவிரோத குடியேறியவர்களை பதிவு செய்யும் முயற்சி என்பது சரியான நிர்வாக நோக்கோடு மேற்கொள்ளப்படுகிறதா என்பதிலும் சந்தேகம் எழுகிறது.

இந்த நிலையில், இந்தியர்கள் மிகவும் கவனமாகவும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழவும், மாற்றம் ஏற்பட்டால் சட்ட ஆலோசனையை பெறவும் தேவைப்படுகிறது. இது, அவர்களது அமெரிக்க வாழ்வில் எதிர்காலத்தில் ஏதேனும் தடைகள் இல்லாமல் தொடர உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+