கட்டிப்புடிக்கிறதுக்கு இப்படியொரு ரூல்ஸா..! நியூசிலாந்து விமான நிலையத்தில் புது கட்டுப்பாடு..!

நியூசிலாந்தில் உள்ள டுனெடினில் விமான நிலையத்தில் புதுவிதமான கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஒருவரை வழியனுப்பும் போது அதிபட்சம் 3 நிமிடங்கள் மட்டுமே கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இருந்து புறப்படும் பயணிகள், தங்களுடைய உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடைகளை சுருக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.

ஒருவர் தனது வேலை, படிப்பு அல்லது வேறு ஏதேனும் சில காரணங்களுக்காக சொந்த ஊர், குடும்பம், நட்புகள் என அனைத்தையும் விட்டு வெளியே செல்வதற்கான வாய்ப்புள்ளது. அவர்கள் விமானத்தின் மூலமோ, ரயிலின் மூலமோ நீண்ட தூரம் நீண்ட நாட்கள் பயணிக்கலாம். அப்படி பயணிக்கும் நபரை அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பாச மிகுதியில் கட்டிப்பிடித்து வழியனுப்புவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் நியூசிலாந்தில் விதிக்கப்பட்டுள்ளது.

 கட்டிப்புடிக்கிறதுக்கு இப்படியொரு ரூல்ஸா..! நியூசிலாந்து விமான நிலையத்தில் புது கட்டுப்பாடு..!

நியூசிலாந்தில் தெற்கு தீவில் உள்ள டுனெடின் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து அதிகம் இருக்கும். அங்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த வினோத கட்டுப்பாட்டை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதாவது, ஒருவரை வழியனுப்புவதற்கு 3 நிமிடங்கள் வரை மட்டுமே கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக கட்டிப்பிடித்து வழியனுப்ப வேண்டுமென்றால் விமான நிலைய கார் பார்க்கிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள் என விமான நிலையத்தில் பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், விமான நிலைய முனையத்தில் பயணிகள் அடுத்தடுத்து புறப்படுவதற்கும், விமான நிலைய நெரிசலை குறைக்கப்படும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி டான் டி போனோ கூறுகையில், விமான நிலையங்களில் உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடைகள் ஒரு பொதுவானது என்றும், ஆனால் நியூசிலாந்தின் டுனெடினில் இருந்து புறப்படும் பயணிகள் விரைவாக செயல்பட வேண்டும் என்பதால், விமான நிலையத்தின் டிராப்-ஆஃப் பகுதியில் குட்பை கட்டிப்பிடிப்பதற்கான புதிய மூன்று நிமிட நேர வரம்பு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கானது என்று கூறியுள்ளார். விமான நிலையத்திற்கு வெளியே பயணிகள் இறங்கும் பகுதியில் அனைத்தும் சீராக செல்ல வேண்டும் என்பதால், இந்த மாதம் முதல் கடில் கேப் விதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ள டுனெடினின் விமான நிலையம் ஆனது 135,000 மக்கள் வசிக்கும் நகரத்திற்கு சேவை செய்யும் டெர்மினல் எனவும், எனவே வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்ற விரும்புவதாகவும், மேலும், 20-வினாடி கட்டிப்பிடித்தல் என்பதே நல்வாழ்வை அதிகரிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸிடாஸின் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை வெளியிட போதுமானது என்று டி போனோ கூறினார். எதுவுமே அதிக நேரம் எடுத்தால் அருவருப்பானதாகிவிடும் என்று கூறினார்.

ஒரு நாள் முழுவதும் அவர்களை நினைத்திருக்க மூன்று நிமிட அணைப்பு போதுமானது.யாராவது அதை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அதிகாரிகள் "அணைப்பு போலீசை அழைக்க மாட்டார்கள்", ஆனால் கட்டிப்பிடிப்பதை கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறுவார்கள் என்று கூறியுள்ளார். எவ்வளவு நேரம் மக்கள் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதைச் சொல்ல நாங்கள் இங்கு வரவில்லை, தயவு செய்து நகர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

விமான நிலைய நிர்வாகத்தின் இந்த செயல் மனித உணர்வுகளுக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது. மனிதாபிமானமற்ற செயல் என்று பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்து வருகின்றனர்.

டுனெடின் விமான நிலையம் மூன்று நிமிடங்களில் கட்டியணைக்கும் விதிகளில் முதல் விமானம் நிலையம் இல்லை. இதில் ஏற்கனவே, டென்மார்க்கில் உள்ள அல்போர்க் விமான நிலையம் உள்ளது. 2013 ஆம் ஆண்டில், வாகன நிறுத்துமிடங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க, "முத்தம் மற்றும் குட்பை" பகுதியை அறிமுகப்படுத்தியது. நியூசிலாந்து தெற்கு தீவில் அமைந்துள்ள இந்த டுனெடின் நகரம், ஆக்லாந்து விமான நிலையத்திற்கு (AKL) பிறகு நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+